யுவராஜ்சிங்கிற்கு அர்ஜூனா விருது: விஜயகுமார் யோகேஸ்வர் தத்துக்கு கேல் ரத்னா விருது || Vijay Yogeshwar to get Khel Ratna Arjuna award for 25
Logo
சென்னை 05-07-2015 (ஞாயிற்றுக்கிழமை)
யுவராஜ்சிங்கிற்கு அர்ஜூனா விருது: விஜயகுமார்-யோகேஸ்வர் தத்துக்கு கேல் ரத்னா விருது
யுவராஜ்சிங்கிற்கு அர்ஜூனா விருது: விஜயகுமார்-யோகேஸ்வர் தத்துக்கு கேல் ரத்னா விருது
புதுடெல்லி,ஆக.18-
 
விளையாட்டில் சாதனை படைக்கும் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மத்திய அரசு சிறப்பு விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு விருதுக்கான வீரர்களை, தேர்வுக்குழு தேர்வு செய்து மத்திய விளையாட்டுத் துறைக்கு பரிந்துரை செய்துள்ளது.
 
மேலும் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற துப்பாக்கி சுடும் வீரர் விஜயகுமார் மற்றும் வெண்கலம் வென்ற மல்யுத்த வீரர் யோகேஸ்வர் தத் ஆகியோருக்கு உயரிய விருதான ராஜீவ் கேல்ரத்னா விருது வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
 
புற்று நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்து, தேசிய அணிக்குத் திரும்பிய முன்னளி கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் உள்ளிட்ட 25 பேருக்கு அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு விளையாட்டுத்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
 
ஹாக்கி வீரர் சர்தார்சிங், மல்யுத்த வீராங்கனை கீதா போகட், மல்யுத்த வீரர் நரசிங்க யாதவ், துப்பாக்கி சுடும் வீரர்கள் அன்னுராஜ் சிங், ஓம்கார்சிங், பேட்மிண்டன் பிரிவில் காஷ்யப், அஸ்வின் பொன்னப்பா, வில்வித்தை வீராங்கனை தீபிகா, பம்பையலா தேவி ஆகியோர் 25 பேர் கொண்ட அர்ஜூனா விருது பட்டியலில் உள்ளனர்.
 
கேல்ரத்னா விருதுக்கு தேர்வு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக விஜயகுமார், யோகேஷ்வர் தத் ஆகியோர் தெரிவித்தனர். இந்த விருது பெறுவோர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு ஓரிரு நாளில் விளையாட்டு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும்.
 
பொதுவாக தேர்வுக்குழு அளிக்கும் பெயர்களையே விளையாட்டு அமைச்சகம் ஏற்கும் என்பதால் இதுவே இறுதி அறிக்கையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
கேல்ரத்னா விருது பெறுபவர்களுக்கு ரூ.7.5 லட்சம் பரிசு, பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் வழங்கப்படும். அர்ஜூனா விருது பெறுபவர்களுக்கு அர்ஜூனன் சிலை மற்றும் பதக்கத்துடன் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

கத்தாரில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.1 கோடி தங்க கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

ஆலந்தூர்,ஜூலை.5–கத்தார் நாட்டின் தோகா நகரில் இருந்து கத்தார் ஏர்வேஸ் பயணிகள் விமானம் இன்று அதிகாலை 5 ....»