சாலை விபத்துகளில் இறந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்: ஜெயலலிதா உத்தரவு || rs one lakhs to road accident deceased family jayalalitha order
Logo
சென்னை 09-10-2015 (வெள்ளிக்கிழமை)
சாலை விபத்துகளில் இறந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்: ஜெயலலிதா உத்தரவு
சாலை விபத்துகளில் இறந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்: ஜெயலலிதா உத்தரவு
சென்னை, ஆக. 18-
 
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
 
திருவண்ணாமலை மாவட்டம்,  செய்யார் வட்டம், கொடையம்பாக்கம் கிராமம், மோரணம்-அப்துல்லாபுரம் சாலையில் 12.8.2012 அன்று இரு சக்கர வாகனம் ஒன்றின் மீது அரசு பேருந்து மோதியதில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த, கொடையம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சின்னக்குழந்தை என்பவரின் மகன்  முனியாண்டி மற்றும் அருணாச்சலம் என்பவரின் மகன் மணிவண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;
 
ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், அம்மாபேட்டை, படவல்கால்வாய் கிராமத்தில் 13.8.2012 அன்று ஈரோடிலிருந்து  கிருஷ்ணகிரிக்குச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து எதிரே வந்த லாரி மீது மோதியதில், பேருந்தில் பயணம் செய்த குப்பாண்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவரின் மனைவி ராஜம்மாள்,  சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், சௌரிமா நகரைச் சேர்ந்த கங்காதரன் என்பவரின் மனைவி  பத்மாவதி மற்றும் செட்டியூரைச் சேர்ந்த மாது என்பவரின் மனைவி  வசந்தா ஆகியோர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியையும்,
 
மதுரை மாவட்டம், மதுரை தெற்கு வட்டம், மேல்மதுரை கிராமத்தில் 14.8.2012 அன்று செங்கோட்டையிலிருந்து கோயம்புத்தூர் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து  எதிரே வந்த வேன் மீது மோதியதில், வேனில் பயணம் செய்த சிவகங்கை மாவட்டம், கீழடி கிராமத்தைச் சேர்ந்த  கருப்பு என்பவரின் மகன் பெரியசாமி மற்றும் அந்தோணிராஜ் என்பவரின் மகன் ஜேம்ஸ்ராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
 
இந்த  சாலை விபத்துகளில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்,  அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் அவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு  லட்சம் ரூபாய் வழங்க வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
 
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

ஒரே நாளில் இருபதாயிரம் முறை தும்பும் சிறுமி: வீடியோ வடிவில்

ஒரு நாளின் இரண்டு, மூன்று தும்மல்கள் நம்மை எந்தளவு பாதிக்கின்றது! இருபதாயிரம் முறை ஒரே நாளில் ....»

VanniarMatrimony_300x100px_2.gif