வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு || rs one lakhs to deceased family jayalalitha order
Logo
சென்னை 12-02-2016 (வெள்ளிக்கிழமை)
  • 20 ஆயிரம் வாக்குசாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்: தலைமை தேர்தல் ஆணையர்
  • ராணுவ வீரர் ஹனுமந்தப்பா உடலுக்கு ராகுல்காந்தி, மனோகர் பாரிக்கர், கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மரியாதை
வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை, ஆக.18-
 
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
விருதுநகர் மாவட்டம்,  சாத்தூர் வட்டம்,  துலுக்கன்குறிச்சி  கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார்  பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் 10.8.2012 அன்று ஏற்பட்ட வெடி விபத்தில், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த சிவகாசி வட்டம், கொட்டமடக்கிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னமுனியாண்டி என்பவரின் மகன் முனீஸ்வரன் சிகிச்சை பலனின்றி 12.8.2012 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியையும், விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், மாரனேரி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு தொழிற்சாலையில் 13.8.2012 அன்று ஏற்பட்ட வெடி விபத்தில் கல்லமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரின் மனைவி ராமலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். 
 
இந்த வெடி விபத்துகளில் அகால மரணமடைந்த  முனீஸ்வரன் மற்றும்  ராமலட்சுமி ஆகியோரின் குடும்பத்தாருக்கு  எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
மேலும், விருதுநகர் மாவட்டம்,  மாரனேரி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு தொழிற்சாலையில் 13.8.2012 அன்று ஏற்பட்ட வெடி விபத்தில் சிங்கம்பட்டி, மாரனேரி கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி என்பவரின் மகன் செல்வராஜ் காயமடைந்து  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தம் அடைந்தேன்.
 
இவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும்,  விருதுநகர்  மாவட்ட நிருவாகத்திற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இந்தத் துயரச் சம்பவங்களில் காலமான முனீஸ்வரன் மற்றும் திருமதி ராமலட்சுமி ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் செல்வராஜுக்கு 25,000/- ரூபாயும்  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

சியாச்சின் பனிச்சரிவில் உயிர் இழந்த கேரள ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: மாநில அரசு அறிவிப்பு

காஷ்மீர் மாநிலம் சியாச்சின் பகுதியில் கடந்த 3-ந்தேதி கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், அங்கு பாதுகாப்பு ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif