Logo
சென்னை 25-04-2014 (வெள்ளிக்கிழமை)
இந்தூர் டீக்கடையில் தீ விபத்து: 4 குழந்தை தொழிலாளர்கள் படுகாயம்
இந்தூர்,ஆக.18-
 
மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் பாம்பே பஜாரில் உள்ள ஒரு டீக்கடையில் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
 
இன்று காலையில் நடந்த இந்த விபத்தில், கடையில் வேலை செய்த சதாம், அமீன், சலீம், ஷேக் சலீம் ஆகிய 4 சிறுவர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
சிலிண்டரில் கசிவு ஏற்பட்டபோது யாரோ ஒருவர் பீடி குடித்ததாகவும், அதனால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் கடையின் உரிமையாளர் முகமது அப்துல் ஹாஜி கூறினார்.
 
தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இவ்விபத்து தொடர்பாக கடை உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை ஆவார்களா?: இன்று தீர்ப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு ....»