டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு: வி.வி.எஸ்.லட்சுமண் அறிவிப்பு || test cricket VVS Laxman announced retirement
Logo
சென்னை 31-10-2014 (வெள்ளிக்கிழமை)
  • புனே அருகே 7 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்து
  • மராட்டிய மாநில் முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவியேற்பு
  • சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட 2.5 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்
  • ராமநாதபுரத்தில் போராட்டம்: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • 30–ம் ஆண்டு நினைவு தினம்: இந்திரா சமாதியில் சோனியா, மன்மோகன், ராகுல் அஞ்சலி
  • தனியார் டி.வி.க்கு பணம் கைமாறிய வழக்கு: கனிமொழி உள்பட 19 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய உத்தரவு
  • இலங்கை நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பார்வையிட்டார்
  • தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை திகார் சிறைக்கு மாற்ற வேண்டும்: சுப்ரமணியசாமி
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு: வி.வி.எஸ்.லட்சுமண் அறிவிப்பு
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு: வி.வி.எஸ்.லட்சுமண் அறிவிப்பு
ஐதராபாத், ஆக.18-
 
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி 23-ம் தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி 31-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 4-ம் தேதி முடிவடைகிறது.
 
இந்தத் தொடருடன், இந்திய வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் ஓய்வுபெறப் போவதாக தகவல்கள் வெளியாகின. தனது சொந்த ஊரான ஐதராபாத்தில் நடக்க உள்ள, நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது லட்சுமண் தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இன்று தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.
 
இது உடனடியாக நடைமுறைக்கு வருவதாக கூறியதால், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட மாட்டார்.இதுதொடர்பாக ஐதராபாத்தில் நிருபர்களைச் சந்தித்த வி.வி.எஸ்.லட்சுமண் கூறியதாவது:-
 
சர்வதேச போட்டியில் அறிமுகமாகி 16 ஆண்டுகளாக இந்தியாவுக்காக விளையாடியிருக்கிறேன். எனவே நான் ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான தருணம் என நினைக்கிறேன். இந்திய அணியில் இடம்பிடித்து இந்திய தொப்பியை அணியவேண்டும் என்பது ஒவ்வொரு இளம் வீரருக்கும் கனவாக உள்ளது.
 
இளைஞர்களுக்கு வழிவிட்டு அவர்களின் திறமையை நிரூபிக்க வாய்ப்பு கொடுத்துள்ளேன். நாட்டுக்காக கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி இந்தியாவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் சிறப்பாக விளையாடியிருக்கிறேன்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
கடந்த இங்கிலாந்து தொடரிலிருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் ஏமாற்றத்தை சந்தித்த லட்சுமண், தனது மோசமான ஆட்டம் காரணமாகவே ஓய்வு முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.
 
37 வயதான லட்சுமண் 1996-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். இதுவரை 134 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அவர் 17 சதம் மற்றும் 56 அரைசதங்களுடன் 8781 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 281 ரன்கள் எடுத்துள்ளார்.
 
மேலும் 86 ஒருநாள் போட்டிகளில் ஆடி 6 சதம், 10 அரை சதங்களுடன் 2338 ரன்களும் எடுத்துள்ளார். பேட்டிங் மட்டுமின்றி சிறப்பாக பீல்டிங் செய்யும் லட்சுமண், டெஸ்ட் போட்டிகளில் 135 கேட்சுகள் பிடித்துள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

உலக பில்லியர்ட்ஸ்: பங்கஜ் அத்வானி சாம்பியன்

893 என்ற புள்ளி கணக்கில் ராபர்ட் ஹாலை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். பங்கஜ் அத்வானி ....»