தஞ்சையில் போலீசார் பிடியில் இருந்து தப்பி ஓடிய கைதி அகழியில் விழுந்ததில் படுகாயம் || tanjore police security prisoner escape then injury
Logo
சென்னை 08-10-2015 (வியாழக்கிழமை)
  • தெலுங்கானாவில் அரசு பஸ் மீது லாரி மோதி விபத்து: 20 பேர் பலி
  • சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரியின் மனைவி கைது
  • சென்னையின் பல்வேறு இடங்களில் மழை
  • சிவசேனா எதிர்ப்பு எதிரொலி: மும்பையில் பாகிஸ்தான் பாடகரின் கலை நிகழ்ச்சி ரத்து
  • இணையத்தை தெறிக்கவிடும் தலயின் வேதாளம் டீசர்
தஞ்சையில் போலீசார் பிடியில் இருந்து தப்பி ஓடிய கைதி அகழியில் விழுந்ததில் படுகாயம்
தஞ்சையில் போலீசார் பிடியில் இருந்து தப்பி ஓடிய கைதி அகழியில் விழுந்ததில் படுகாயம்
தஞ்சாவூர்,ஆக.18-
 
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள சேத்திருருப்பு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது20). ஒரு வழக்கு தொடர்பாக போலீசாரால் கைது செய்யப்பட்ட இவர் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தஞ்சை கோர்ட்டு சாலையில் உள்ள பாஸ்டல் பள்ளியில் அடைக்கப்பட்டார்.
 
இந்தநிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்காக நேற்று சரவணனை போலீசார் அழைத்துக் கொண்டு மயிலாடுதுறைக்கு சென்றனர்.அங்கு கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் தஞ்சை சிறையில் அடைப்பதற்காக சரவணனை பஸ்சில் போலீசார் அழைத்து வந்தனர்.
 
தஞ்சை மேம்பாலம் நிறுத்தத்தில் பஸ் நின்றவுடன் போலீசாருடன் சரவணன் கீழே இறங்கினார். பின்பு சிறைக்கு நடந்து வந்தபோது திடீரென சரவணன் தப்பி ஓடினார். உடனே போலீசாரும் அவரை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர்.
 
போலீசாரின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக சிவகங்கைபூங்கா அருகே உள்ள அகழியில் சரவணன் குதித்தார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

section1

ஜாக்டோ அமைப்பினர் வேலை நிறுத்தம்: பள்ளிக்கூடங்கள் இன்று வழக்கம்போல செயல்படும் - பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவிப்பு

ஜாக்டோ அமைப்பினர் வேலை நிறுத்தம் என்று அறிவித்தபோதிலும் பள்ளிக்கூடங்கள் இன்று (வியாழக்கிழமை) வழக்கம் போல செயல்படும். ....»

VanniarMatrimony_300x100px_2.gif