மனைவி கொலையில் கைதான சென்னை என்ஜினீயர் தற்கொலை முயற்சி || wife killed chennai engineer attempt suicide
Logo
சென்னை 13-02-2016 (சனிக்கிழமை)
மனைவி கொலையில் கைதான சென்னை என்ஜினீயர் தற்கொலை முயற்சி
மனைவி கொலையில் கைதான சென்னை என்ஜினீயர் தற்கொலை முயற்சி
கிருஷ்ணகிரி, ஆக.18-

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள சின்ன பர்கூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மணிகண்டன் (வயது 25). சென்னை வேளச்சேரியில் சாப்ட்வேர் என்ஜினீயராக உள்ளார். மணிகண்டனுக்கும் அச்சமங்கலத்தை சேர்ந்த சாமிநாதன் மகள் ஆஷா (22) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து.

இந்த தம்பதிக்கு யாசிகா (1 1/2) என்ற பெண் குழந்தை உள்ளது. சென்னையில் வேலை பார்த்து வந்ததால் மணிகண்டன் மனைவி, குழந்தைகளுடன் வேளச்சேரியில் வசித்து வந்தார். இதற்கிடையே மகள் மற்றும் குழந்தைகளை பார்க்க சாமிநாதன் கடந்த 14-ந்தேதி சென்னைக்கு சென்றிருந்தார்.

பின்னர் மருமகன்,மகளை அழைத்து கொண்டு நேற்று காலை அச்சமங்கலத்திற்கு சாமிநாதன் வந்தார். அப்போது சாமிநாதன் தனது பேத்தி யாசிகாவை தூக்கிக் கொண்டு அருகே இருந்த உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது தனியாக இருந்த மணிகண்டன், மனைவி ஆஷாவை உல்லாசத்திற்கு அழைத்தார். ஆனால் இதற்கு மறுத்து ஆஷா சென்னையில் இருந்து வந்த பயணத்தால் தனக்கு சோர்வாக உள்ளதாக கூறினார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த மணிகண்டன் வீட்டில் இருந்த களி தயாரிக்க பயன்படும் உருட்டு கட்டையால் தாக்கினார்.

எதிர்பாராத விதமாக நடந்த இந்த தாக்குதில் வலி தாங்காமல் ஆஷா சத்தம் போட்டார். இருப்பினும் ஆத்திரம் தீராத மணிகண்டன் வெறியில் ஆஷாவின் முகத்தில் பலமாக தாக்கினார். இதில் ஆஷா பலத்த காயம் அடைந்ததார். அப்போது ஆஷாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது ஆஷா பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டு இருந்தார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் துடிதுடித்து இறந்தார்.

அப்போது ஆஷாவை தாக்கி கொலை செய்த மணிகண்டன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கஜேந்திரன், இன்ஸ்பெக்டர் தட்சிணா மூர்த்தி ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கொலையாளி மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.

இறந்த ஆஷாவின் உடலை மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கைது செய்யப்பட்ட மணிகண்டன் தந்திகுப்பம் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டார். அப்போது போலீசாரின் பிடியில் இருந்து தப்பித்த அவர் போலீஸ் நிலைய மாடிக்கு சென்று குதித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் காயம் அடைந்த மணிகண்டனை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif