டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய அணியில் இருந்து மகேஷ் பூபதி போபண்ணா நீக்கம் || Bhupathi Bopanna dropped from Indian team for Davis Cup Paes opts out
Logo
சென்னை 28-01-2015 (புதன்கிழமை)
டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய அணியில் இருந்து மகேஷ் பூபதி-போபண்ணா நீக்கம்
டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய அணியில் இருந்து மகேஷ் பூபதி-போபண்ணா நீக்கம்
புதுடெல்லி,ஆக.18-
 
டேவிஸ் கோப்பை டென்னிஸ் அணியிலிருந்து மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா ஆகியோரை இந்திய டென்னிஸ் சங்கம் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
 
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் ஆசியா-ஓசியானியா முதல் சுற்று லீக் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இப்போட்டி சண்டிகரில் செப்டம்பர் 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது.
 
இப்போட்டியில் வெற்றி பெறும் அணி குரூப்-1 பகுதிக்கு முன்னேறும். தோல்வியடையும் அணி மற்றொரு லீக் போட்டியில் சீன தைபேய் அணியுடன் விளையாட வேண்டும்.
 
இப்போட்டியில் விளையாடும் இந்திய வீரர்கள் தேர்வு இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் மகேஷ் பூபதி,  ரோகன் போபண்ணா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
 
தேர்வுக்குழுவின் முடிவை விமர்சித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் லியாண்டர் பயஸ் சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளதால், அவர் டேவிஸ் கோப்பை போட்டியில் விளையாடவில்லை.
 
காயம் காரணமாக சோம்தேவ் தேர்வர்மனும் டேவிஸ் கோப்பை அணியில் இடம்பெறவில்லை. நியூசிலாந்துக்கு எதிராக விளையாடும் இந்திய அணியில் யூகி பாம்ப்ரி, விஷ்ணு வர்தன், ஷாகீத் மினேனி, திவிஜ் சரண், சனம்சிங், ஸ்ரீராம் நாராயணசாமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

ஆசிய கோப்பை கால்பந்து: இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த அரைஇறுதியில் ஆஸ்திரேலிய அணி ....»