உசிலம்பட்டி அருகே பணம் வைத்து சூதாடிய போலீஸ்காரர் உள்பட 8 பேர் கைது: ரூ. 1 லட்சம் பறிமுதல் || eight arrest include police for gambling near usilampatti
Logo
சென்னை 23-05-2015 (சனிக்கிழமை)
  • தமிழக முதலமைச்சராக இன்று காலை 11 மணிக்கு பதவியேற்கிறார் ஜெயலலிதா
  • ஸ்ரீசாந்த் மீதான சூதாட்ட வழக்கில் இன்று தீர்ப்பு
  • குன்னூர் பழக்கண்காட்சி இன்று தொடக்கம்
உசிலம்பட்டி அருகே பணம் வைத்து சூதாடிய போலீஸ்காரர் உள்பட 8 பேர் கைது: ரூ. 1 லட்சம் பறிமுதல்
உசிலம்பட்டி அருகே பணம் வைத்து சூதாடிய போலீஸ்காரர் உள்பட 8 பேர் கைது: ரூ. 1 லட்சம் பறிமுதல்
உசிலம்பட்டி, ஆக. 18-
 
உசிலம்பட்டி அருகே உள்ள மேக்கிழார்பட்டி பகுதியில் உள்ள சுடுகாட்டில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக உசிலம்பட்டி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமால் அழகுக்கு தகவல் கிடைத்தது.
 
உடனடியாக அவரது தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் லிங்கசாமி, செந்தாமரை மற்றும் போலீசார் விரைந்து சென்று சுடுகாடு பகுதியில் ரோந்து சென்றனர். 
 
அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த ராஜாங்கம் (வயது46), மார்கண்டன் (30), சந்தானம் (36), குமார் (46), ஜெயதுரை (35) சிவனாண்டி (30), ஆறுமுகம் (28), ராஜேந்திரன் ஆகிய 8 பேரை கைது செய்தனர்.
 
மேலும் அவர்களிடம் இருந்து ரூ.ஒரு லட்சத்து 16 ஆயிரம் ரொக்க பணம், 3 மோட்டார் சைக்கிள்கள், செல்போன்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டு உள்ள சிவனாண்டி தற்போது எழுமலை போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - மதுரை

160x600.gif