கல்விக் கடன் கொடுக்க மறுக்கும் வங்கி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: ப.சிதம்பரம் எச்சரிக்கை || action on bank officers if not giving loan to students p chidambaram warning
Logo
சென்னை 06-10-2015 (செவ்வாய்க்கிழமை)
கல்விக் கடன் கொடுக்க மறுக்கும் வங்கி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: ப.சிதம்பரம் எச்சரிக்கை
கல்விக் கடன் கொடுக்க மறுக்கும் வங்கி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: ப.சிதம்பரம் எச்சரிக்கை
புதுடெல்லி, ஆக. 18-
 
பொருளாதார சரிவு மற்றும் அதிகரித்து வரும் மோசமான கடன்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக புதுடெல்லியில் இன்று பொதுத்துறை வங்கிகளின் அதிகாரிகளுடன் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆய்வு நடத்தினார்.
 
பின்னர் அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:-
 
வங்கிகளில் கல்விக் கடன் பெறுவது மாணவர்களின் உரிமை. எனவே கல்விக் கடன் வழங்க மறுக்கும் வங்கி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கல்விக் கடனை நிராகரிக்கும் பொறுப்பு வங்கியின் கிளை மேலாளருக்கு இல்லை.
 
மேலும் விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் சான்று நகல் வழங்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் குறுகிய கால கடன்கள் நீண்ட கால கடன்களாக மாற்றியமைக்கப்படும். விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் வங்கிகள் தங்கள் வட்டி விகிதம் மற்றும் தவணை தொகையை குறைக்க வேண்டும்.
 
பாரத ஸ்டேட் வங்கி, தவணைத் தொகையை குறைத்திருப்பதால் கார் விற்பனை அதிகரிக்கும்.  ஏடிஎம் மையங்களின் எண்ணிக்கையானது இரண்டு மடங்காக, அதாவது அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் 63 ஆயிரம் ஏடிஎம் மையங்கள் என்ற அளவில் அதிகரிக்கப்படும்.வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் வகையிலும் ஏடிஎம் இயந்திரங்களை மாற்றியமைக்க வேண்டும் என்று வங்கிகள் கேட்டுள்ளன.
 
இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

பொருளாதார நெருக்கடியில் பலநாடுகள் சிக்கியுள்ள வேளையில் முதலீட்டுக்கு ஏற்ற இடமாக இந்தியா உள்ளது: பிரதமர் பெருமிதம்

உலகின் பலநாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள வேளையில் முதலீட்டுக்கு ஏற்ற இடமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் நரேந்திர ....»

VanniarMatrimony_300x100px_2.gif