வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு பாதுகாப்பு: தலைமைச் செயலாளர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை || northeast indian security head secretary meeting with police officers
Logo
சென்னை 26-11-2015 (வியாழக்கிழமை)
  • ரஷ்யாவிடம் இருந்து இயற்கை எரிவாயு வாங்குவதை நிறுத்துகிறது உக்ரைன்
  • சென்னையில் 24 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு பாதுகாப்பு: தலைமைச் செயலாளர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை
வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு பாதுகாப்பு: தலைமைச் செயலாளர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை
சென்னை, ஆக.18-
 
இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அசாம் மாநிலத்தில் கலவரம் நடந்ததை தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு மாநிலங்களிலும் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். இதனால் ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
 
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலும் நேற்று அதிக அளவில் வடமாநில இளைஞர்கள் வந்திருந்தனர். இந்த நிலையில் சென்னையிலும், தமிழ்நாட்டின் பிற பகுகளில் வசிக்கும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், உரிய பாதுகாப்பு அனைவருக்கும் வழங்கப்படும் என்றும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
 
இதன் தொடர்ச்சியாக சென்னை கோட்டையில் இன்று தலைமைச் செயலாளர் திபேந்திரநாத் சாரங்கி போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் உள்துறை செயலாளர் ராஜகோபால், போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம், ரெயில்வே போலீஸ் ஐ.ஜி., டி.ஐ.ஜி. மற்றும் போலீஸ் சூப்பிரண் டுகள் இதில் கலந்து கொண்டனர்.
 
கூட்டத்தில் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆலோசிக்கப்பட்டது. 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

குதிரை பந்தயத்தின் போது துபாய் ஆட்சியாளர் பயன்படுத்திய ஹெல்மெட் ரூ.43 கோடிக்கு ஏலம்

ஐக்கிய அரபு அமீரகங்களின் ஒன்றான துபாயில் ஆட்சியாளராக இருப்பவர் ஷேக் முகம்மது பின் ராஷித் அல் ....»