விளையாட்டில் சாதனை படைத்த 4 தமிழக வீரர்களுக்கு விருது: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் வழங்கினார் || tamilnadu olympic association achievement player prize sivanthi aditanar give olympic games
Logo
சென்னை 28-11-2015 (சனிக்கிழமை)
விளையாட்டில் சாதனை படைத்த 4 தமிழக வீரர்களுக்கு விருது: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் வழங்கினார்
விளையாட்டில் சாதனை படைத்த 4 தமிழக வீரர்களுக்கு விருது: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் வழங்கினார்
சென்னை, ஆக. 18-

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று காலை நடந்தது. தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவர்  டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க பொதுச் செயலாளர் கே.முருகன், மூத்த துணைத் தலைவர் டபிள்யூ. ஐ.தேவாரம், துணைத்தலைவர்கள் ஜே.எஸ்.சோப்ரா, ஐசரி கே.கணேஷ், எஸ்.கிளட்டஸ் பாபு, பொருளாளர் பி.பங்காருபாபு மற்றும் அனைத்து பிரிவு விளையாட்டு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அனைத்து விளையாட்டுகளின் மேம்பாடு பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. சர்வதேச மற்றும் தேசிய அளவில் விளையாட்டில் சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த 4 பேருக்கு தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவர் டாக்டர் பா.சிவந்திஆதித்தன் விருது மற்றும் ரொக்க பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

இந்தியாவின் `நம்பர் ஒன்' டேபிள் டென்னிஸ் வீரரான ஏ.சரத்கமலுக்கு மாமல்லன் விருது வழங்கப்பட்டது. அத்துடன் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது. சரத்கமல் பயிற்சிக்காக ஜெர்மனி சென்று உள்ளார். இதனால் அவர் சார்பில் அவரது மனைவி ஸ்ரீபூர்ணி விருதையும், ரொக்கப்பரிசையும் பெற்றுக் கொண்டார்.

நீச்சல் வீராங்கனை ஜெயவீனா விஜய்குமார், குத்துச்சண்டை வீரர் கே.மணிகண்டன், தேக்வாண்டோ வீரர் எச்.பாலசுப்பிரமணி ஆகியோருக்கு மெச்சத்தக்க விருதும், தலா ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது. விருது பெற்ற வீரர், வீராங்கனைகள் செய்துள்ள சாதனை விவரம் வருமாறு:-

டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல் காமன்வெல்த் விளையாட்டு மற்றும் 2011-12ம் ஆண்டு ராஞ்சியில் நடந்த தேசிய விளையாட்டுப் போட்டியில்  சிறப்பான வெற்றிகளை பெற்றார். நீச்சல் வீராங்கனை ஜெயவீனா கடந்த மாதம் நடந்த 39-வது தேசிய ஜுனியர் நீச்சல் போட்டியில் 50 மீட்டர் மற்றும் 100 மீட்டர் பிரஸ்டிரோக் பிரிவில் தனது சாதனையை புதுப்பித்தார். இவர் சென்னை செட்டிநாடு வித்யாசரம் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார்.

வளர்ந்து வரும் குத்துச்சண்டை வீரரான மணிகண்டன் 26-வது தேசிய ஜுனியர் குத்துச்சண்டையில் தங்கப்பதக்கமும், 58-வது தேசிய சீனியர் குத்துச்சண்டையில் வெள்ளிப்பதக்கமும் (50 கிலோ பிரிவு) பெற்றார்.

தேக்வாண்டோ வீரர் எச்.பாலசுப்பிரமணி மாநில அளவிலான போட்டிகளில் தங்கப்பதக்கமும், அசாம் மற்றும் ஜார்க்கண்டில் நடந்த தேசிய விளையாட்டில் வெண்கல பதக்கமும் பெற்றார். கடந்த ஜுன் மாதம் இவர் பயிற்சிக்காக கொரியா சென்று வந்தார். 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்