நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு: தனியார் நிறுவனங்கள் பயன் அடைந்தது எப்படி? பரபரப்பு தகவல்கள் || coal mine allotement cheating how to benefit private companies
Logo
சென்னை 02-12-2015 (புதன்கிழமை)
  • சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று இயக்கப்படவிருந்த விமானங்கள் ரத்து
  • அடையாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து நிறுத்தம்
  • சென்னை உள்ளிட்ட 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • கனமழை: காசி தியேட்டர் மேம்பாலம் மூடப்பட்டது - போக்குவரத்து நிறுத்தம்
  • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
  • வெள்ளப்பெருக்கு காரணமாக கோட்டூர் மேம்பாலம் மூடப்பட்டது
  • மீனம்பாக்கம் பரங்கிமலை சுரங்கப்பாதையில் வெள்ளம்: போக்குவரத்து நிறுத்தம்
  • என்.எல்.சி தொழிற்சாலையில் 2423 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு
  • ராஜீவ்காந்தி கொலை வழக்கு: குற்றவாளிகளை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை - உச்சநீதிமன்றம்
  • தமிழகத்தில் மழை- வெள்ளம் பாதிப்பு குறித்து அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு: தனியார் நிறுவனங்கள் பயன் அடைந்தது எப்படி?- பரபரப்பு தகவல்கள்
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு: தனியார் நிறுவனங்கள் பயன் அடைந்தது எப்படி?- பரபரப்பு தகவல்கள்
புதுடெல்லி, ஆக. 18-
 
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை மிஞ்சும் வகையில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் நடந்துள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் நேற்று பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
 
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
 
கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை 150 நிலக்கரி சுரங்கங்கள் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் சரியான ஏல நடைமுறை பின்பற்றப்படாததால், எஸ்ஸார்பவர், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், டாடா பவர், ஜிண்டால் ஸ்டீல் உள்ளிட்ட 25 நிறுவனங்கள் பலன் அடைந்தன. இதன்மூலம் அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. முறையான ஏல நடைமுறையை பின்பற்றி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால் அரசுக்கு இந்த இழப்பு ஏற்பட்டு இருக்காது.
 
கடந்த 2010-11-ம் ஆண்டு காலத்தில் சராசரி உற்பத்தி செலவு மற்றும் சராசரி விற்பனை விலை ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிட்டதில், ரூ.1.86 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக முடிவுக்கு வந்தோம். மத்திய பிரதேசத்தில் உள்ள சித்தரஞ்சன் மின் நிலையத்தில் சாசன் திட்டம் மூலம் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் பணியை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
 
இந்த மின் நிலையத்துக்காக, சுரங்கங்களில் இருந்து உபரி நிலக்கரியை பயன்படுத்திக்கொள்ள ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு முறைகேடாக அரசு அனுமதி அளித்துள்ளது. குறிப்பாக மொகெர், மொகெர் அல்மோக்ரி, சட்ராஸல் ஆகிய 3 சுரங்கங்களில் இருந்து உபரி நிலக்கரியை எடுத்துக்கொள்ள இந்நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.29 ஆயிரத்து 33 கோடி அளவுக்கு லாபம் அடைந்துள்ளது. டெல்லி விமான நிலையத்துக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு விட்ட வகையிலும் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
 
டெல்லி விமான நிலையம், அரசு - தனியார் பங்களிப்புடன் செயல்பட்டு வருகிறது. டெல்லி விமான நிலைய ஆணையம், ஜி.எம்.ஆர். என்ற தனியார் நிறுவனமும் இணைந்து விமான நிலைய பணிகளை கவனித்து வருகின்றன. விமான நிலைய திட்டப்பணிகளுக்காக இந்த நிறுவனங்களுக்கு 4,800 ஏக்கர் நிலம் குத்தகைக்கு விடப்பட்டது. இதில் 5 சதவீதம் அல்லது 240 ஏக்கர் நிலம் வணிக நோக்கத்துக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.24 ஆயிரம் கோடி ஆகும். இவ்வளவு விலை மதிப்புள்ள நிலம் ஆண்டுக்கு ரூ.100 என்ற அளவில் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
 
நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட காலத்தில் இருந்து குத்தகை காலமான 60 ஆண்டுகளுக்கு இந்த நிலத்தின் மூலம் இரண்டு நிறுவனங்களும் ரூ.1 கோடியே 63 ஆயிரத்து 557 லட்சம் கோடி லாபம் ஈட்ட முடியும். ஆனால், வெறும் 100 ரூபாய் மட்டுமே குத்தகையாக நிர்யணம் செய்யப்பட்டுள்ளது.
 
அதேபோல், சர்வதேச மற்றும் உள்ளாட்டு விமான பயணிகளிடம் ஒப்பந்த விதிமுறைகளை மீறி இந்த இரு நிறுவனங்களும் விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் வசூலித்துள்ளன. இதன்மூலம் இந்த நிறுவனங்கள் ரூ.3 ஆயிரத்து 415 கோடி அளவுக்கு லாபம் அடைந்துள்ளன. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வழக்கம் போல், மத்திய அரசு இந்த அறிக்கைக்கும் மறுப்பு தெரிவித்துள்ளது. இணை மந்திரி நாராயண சாமி அளித்த பேட்டியில், மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் தனக்குள்ள அதிகார வரம்பை மீறி செயல்பட்டுள்ளது. இந்த அறிக்கை பாராளுமன்ற பொதுகணக்கு குழு ஆய்வுக்கு அனுப்பப்படும். அந்த குழுவின் பரிந்துரைப்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

ஆஸ்திரேலியாவில் இருந்து 3.76 லட்சம் டன் கோதுமை இறக்குமதி: மத்திய அரசு மக்களவையில் தகவல்

புதுடெல்லி, டிச.2 கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியா 3.76 லட்சம் டன் கோதுமையை ....»

AadidravidarMatrimony_300x100px_28-10-15-3.gif