லக்னோ, கோவாவுக்கும் தாக்குதல் பீதி பரவியது || assan riot spread to lucknow and coa
Logo
சென்னை 03-09-2015 (வியாழக்கிழமை)
லக்னோ, கோவாவுக்கும் தாக்குதல் பீதி பரவியது
லக்னோ, கோவாவுக்கும் தாக்குதல் பீதி பரவியது
பெங்களூர், ஆக. 18-
 
வடகிழக்கு மாநில மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற பீதி கடந்த புதன்கிழமை முதன் முதலாக பெங்களூரில் தோன்றியது. அந்த பீதி மைசூர், குடகு பகுதிகளுக்கும் காட்டுத் தீ போல பரவியது. இதனால் கர்நாடகாவில் இருந்து வட கிழக்கு மாநில மக்கள் கூட்டம், கூட்டமாக வெளியேறி வருகிறார்கள். மறுநாள் அந்த பீதி ஆந்திரா தலைநகர் ஐதராபாத்துக்கு பரவியது. அங்குள்ள துறைமுக நகரமான விசாகப்பட்டினத்தில் வசித்து வரும் வடகிழக்கு மாநில மக்களும் பீதியில் சிக்கி தவிக்கிறார்கள்.
 
யாரும் தாக்குதல் நடத்தமாட்டார்கள். பாதுகாப்பு தருகிறோம் என்று ஆந்திர மந்திரிகள் உறுதிமொழி அளித்தபோதும் அங்கு பீதி குறையவில்லை. இதைத் தொடர்ந்து அசாம் மாநில மந்திரிகள் 2 பேர் ஐதராபாத்துக்கு வந்து வடகிழக்கு மாநில மக்களை சமரசம் செய்து வருகிறார்கள். இதற்கிடையே தாக்குதல் பீதி சென்னையிலும் எதிரொலித்தது. சென்னை, திருப்பூர், கோவையில் உள்ள வடகிழக்கு மாநில மக்கள் கூட்டம், கூட்டமாக வெளியேறி வருகிறார்கள்.
 
சென்னையில் வடகிழக்கு மாநில மக்களின் பாதுகாப்புக்கு போலீசார் எல்லா ஏற்பாடுகளும் செய்துள்ளனர். தமிழ்நாட்டில் தங்களுக்கு எந்த பாதிப்பும் பயமும் இல்லை என்பதை ஒத்து கொள்ளும் வடகிழக்கு மாநில மக்கள் பெற்றோர் வற்புறுத்தி அழைப்பதால் திரும்பிச் செல்வதாக கூறினார்கள். இந்த நிலையில் தாக்குதல் பீதி தகவல் கோவா, லக்னோ நகரங்களுக்கும் பரவியுள்ளது.
 
கேரளாவில் இருந்தும் வடகிழக்கு மாநில மக்கள் வெளியேறத் தொடங்கி உள்ளனர். மும்பை மற்றும் புனே நகரங்களிலும் நேற்று முதல் வடகிழக்கு மாநில மக்கள் சற்று பயத்துடன் காணப்படுகிறார்கள். இதன் மூலம் மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, கோவா, கேரளா ஆகிய தென் மாநிலம் முழுவதிலும் இருந்து வடகிழக்கு மாநில மக்கள் வெளியேறுவது தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதல் பீதி நேற்றிரவு உத்தரபிரதேச மாநிலத்துக்கும் தாவி விட்டது. அங்குள்ள அசாம் மக்களும் பீதியில் தள்ளப்பட்டுள்ளனர். நாடெங்கும் பரவி வரும் இந்த தாக்குதல் பீதியை எப்படி கட்டுப்படுத்துவது என்பது புரியாமல் மத்திய, மாநில அரசுகள் தவித்தப்படி உள்ளன. 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

நாடு முழுவதும் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

2014-15-ம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளாக கடந்த 31-ந் தேதியை மத்திய ....»