ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட போது அசாமில் கடைக்காரர் சுட்டுக்கொலை || 144 law withdraw time shop man shot
Logo
சென்னை 01-09-2014 (திங்கட்கிழமை)
  • விழுப்புரம்: செஞ்சி அருகே ஆசிரியர் வீட்டில் 80 சவரன் நகை கொள்ளை
  • ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேவுடன் பிரதமர் மோடி இன்று அதிகாரப்பூர்வ சந்திப்பு
  • பெட்ரோல் விலையை தொடர்ந்து டீசல் விலையும் குறைக்கப்படும்: ராஜ்நாத் சிங்
  • முல்லை பெரியாறு அணையில் ஆய்வு நடத்த 5 பேர் குழு புறப்பட்டது
  • இன்று முதல் 21 சுங்கச்சாவடிகளில் 15 சதவீதம் கட்டணம் உயர்வு
  • மவுலிவாக்கம் கட்டட விபத்து: மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட போது அசாமில் கடைக்காரர் சுட்டுக்கொலை
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட போது அசாமில் கடைக்காரர் சுட்டுக்கொலை
கவுகாத்தி, ஆக. 18-
 
அசாம் மாநிலத்தில் கடந்த மாதம் பூர்வீக போடோ பழங்குடி இன மக்களுக்கும், வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக வந்து குடியேறியுள்ள முஸ்லிம்களுக்கும் மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் 4 மாவட்டங்களில் பரவி மிகப்பெரும் இன கலவரமாக வெடித்தது.
 
இரு தரப்பினரும் கிராமங்களுக்குள் புகுந்து கொலை, தீவைப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டனர். அதில் 77 பேர் கொல்லப்பட்டனர். பல நூறு கோடி ரூபாய் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டன. சுமார் 9 லட்சம் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி அகதிகள் போல முகாம்களில் தங்கியுள்ளனர். கலவர பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்ட பிறகே பதற்றம் தணிந்தது.
 
4 மாவட்டங்களிலும் இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மீண்டும் கலவரம் வெடித்தது. சிறுபான்மை இனமக்கள் மீது ஆசிட் வீசப்பட்டது. இதையடுத்து ராணுவம் ரோந்து பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. 4 மாவட்டங்களிலும் கலவரம் பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில் மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக ஊரடங்கு உத்தரவு சிறிது நேரம் தளர்த்தப்பட்டது.
 
சிரங் மாவட்டத்தில் உள்ள சேல்கட்டி எனும் ஊரில் காசிம்அலி என்பவர் தன் பார்மசியை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் காசிம்அலி கடை முன்பு ரத்த வெள்ளத்தில் பிணமானார். அவரை சுட்ட மர்ம மனிதர்கள் தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் யார் என்று தெரியவில்லை. இதைத் தொடர்ந்து அசாமில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. சிரங் மாவட்டத்தில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

திருப்பதி கோவில் பிரமோற்சவம்: ஏழுமலையானை அலங்கரிக்க 400 தங்க–வைர நகைகள்

நகரி, செப் 1–திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆண்டு பிரமோற்சவம் வருகிற 25–ந் தேதி தொடங்குகிறது. அடுத்த ....»

300x100.jpg