எஸ்.எம்.எஸ். மூலம் வதந்தி: பெங்களூரில் 8 பேர் கைது || sms By rumor In Bangalore 8 peoples arrested
Logo
சென்னை 25-11-2015 (புதன்கிழமை)
எஸ்.எம்.எஸ். மூலம் வதந்தி: பெங்களூரில் 8 பேர் கைது
எஸ்.எம்.எஸ். மூலம் வதந்தி: பெங்களூரில் 8 பேர் கைது
பெங்களூர், ஆக. 18-

வடகிழக்கு மாநில மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று தகவல் பரவியதால் பெங்களூர், சென்னை, ஐதராபாத், புனே, விசாகப்பட்டினம் நகரங்களில் இருந்து வட கிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வெளியேறி வருகிறார்கள். பெங்களூர் நகரில்தான் இந்த பீதி அதிகமாக பரவியுள்ளது. அங்கிருந்து கடந்த 3 நாட்களில் சுமார் 24 ஆயிரம் பேர் தங்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் கர்நாடகாவில் வாழும் வடகிழக்கு மாநில மக்களிடம் பீதியை அதிகரிக்கும் வகையில் நேற்று பெங்களூரில் 3 இடங்களில் அசாம், மாநில மக்கள் மீது திடீர் தாக்குதல் நடந்தது. அசாம் மாநில மக்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது இந்த சம்பவம் மூலம் தெரிய வந்துள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நீலசந்திரா, பிரகாஷ், அஜய்செட்ரி, ரிஜன் குரங், குமார் செட்ரி ஆகிய 5 பேர் வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது கன்னட இளைஞர்கள் சிலர் அவர்கள் மீது குளிர்பான பாட்டில்களையும், கற்களையும் வீசி தாக்குதல் நடத்தினார்கள்.

அதே சமயத்தில் மத்திய பெங்களூர் பகுதியில் மேலும் 3 வடகிழக்கு மாநில மக்கள் மீது திடீர் தாக்குதல் நடந்தது. சந்தையில் காய்கறி வாங்கி கொண்டிருந்த மணிப்பூரைச் சேர்ந்த ஒருவரை 3 பேர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினார்கள்.

பெங்களூரில் நேற்று நடந்த இந்த தாக்குதல் சம்பவங்களால் அங்கு வாழும் வடகிழக்கு மாநில மக்கள் மேலும் பயம் அடைந்துள்ளனர். இதற்கிடையே மைசூர், மங்களூர் நகரங்களுக்கும் இந்த பீதி பரவியது. நாட்டின் பிற பகுதிகளில் வாழும் வடகிழக்கு மாநில மக்கள் மீது யார் தாக்குதல் நடத்தினாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

கர்நாடக பா.ஜ.க. அரசும், வெளி மாநில மக்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று கூறி இருந்தது. அவர்கள் இவ்வாறு உறுதியளித்த சிறிது நேரத்தில், பெங்களூரில் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த 8 பேர் தாக்கப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து பெங்களூர் போலீசார் உடனடியாக அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். வடகிழக்கு மாநில மக்களை தாக்கியதாக நேற்றிரவு 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை சேர்ந்த அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே பெங்களூரில் சிலர் திட்டமிட்டு அசாம் கலவரம் தொடர்பாக தவறான தகவல்களை எம்.எம்.எஸ். மற்றும் எஸ்.எம்.எஸ். மூலம் பரப்புவது பற்றி தகவல்கள் தெரிய வந்தது.

உடனடியாக போலீசார் 8 பேரை கைது செய்தனர். அவர்கள் 8 பேரும் மத கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் எஸ்.எம்.எஸ். தகவல்களை அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களால்தான் பெங்களூ ரில் பீதி பரவியது என்று தெரிய வந்துள்ளது. பெங்களூரில் உள்ள வடகிழக்கு மாநில மக்களிடம் நிலவும் பீதியை தணிக்க மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. பெங்களூரில் வெளிமாநில மக்கள் தாக்கப்படுவதை தடுக்க மத்திய போலீசார் 600 பேர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பெங்களூரில் இரவு-பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். என்றாலும் கர்நாடகாவில் உள்ள வடகிழக்கு மாநில மக்கள் அங்கிருந்து வெளியேறுவது அதிகரித்தப்படி உள்ளது.

நேற்று மட்டும் 3 சிறப்பு ரெயில்களில் 10 ஆயிரத்து 600 பேர் புறப்பட்டு சென்றனர். இன்று (சனிக்கிழமை) 4-வது நாளாக பெங்களூரில் இருந்து ஏராளமானவர்கள் வடகிழக்கு மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றனர். மந்திரிகளும், அதிகாரிகளும் அவர்களை சமரசம் செய்ய மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இன்று காலை மைசூர், குடகு பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பெங்களூர் ரெயில் நிலையத்தில் குவிந்தனர். இதையடுத்து அவர்கள் பாதுகாப்பாக அசாம் செல்வதற்காக கூடுதல் ரெயில்களை இயக்க மத்திய- மாநில அரசுகள் ஏற்பாடு செய்துள்ளன.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

பிரபல கவிஞரின் நினைவு இல்லத்தில் பத்மபூஷன், பத்ம விபூஷன் விருதுகள் கொள்ளை

நாட்டில் சகிப்புத்தன்மையின்மை அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டிவரும் பல்துறை பிரபலங்கள், சாகித்ய அகாடமி, பத்மபூஷன் உள்ளிட்ட நாட்டின் ....»