2 டெஸ்ட், இரண்டு 20 ஓவர் போட்டி: நியூசிலாந்து வீரர்கள் இந்தியா வந்தனர் || test cricket twenty over cricket match new zealand players visit in india
Logo
சென்னை 29-07-2014 (செவ்வாய்க்கிழமை)
  • சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் 50 மின்சார ரெயில்கள் பராமரிப்பு பணிக்காக இன்று ரத்து
  • கும்பகோணம் தீவிபத்து: 10 ஆண்டுகளுக்கு பின் நாளை தீர்ப்பு
  • மாலைமலர் இணையதள வாசகர்கள் அனைவருக்கும் ரம்ஜான் தின வாழ்த்துக்கள்
  • லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறல்
2 டெஸ்ட், இரண்டு 20 ஓவர் போட்டி: நியூசிலாந்து வீரர்கள் இந்தியா வந்தனர்
2 டெஸ்ட், இரண்டு 20 ஓவர் போட்டி:
நியூசிலாந்து வீரர்கள் இந்தியா வந்தனர்
புதுடெல்லி, ஆக. 18-

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டியில் விளையாட திட்டமிட்டது. இதற்காக நியூசிலாந்து அணி இந்தியா வந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள ஐதராபாத் நகருக்கு நியூசிலாந்து வீரர்கள் வந்தனர்.

இந்திய அணி நாளை ஐதராபாத் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 23-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 31-ந்தேதி முதல் செப்டம்பர் 4-ந்தேதி வரை பெங்களூரில் நடக்கிறது. டெஸ்ட் போட்டியை தொடர்ந்து இரண்டு 20 ஓவர் போட்டி நடக்கிறது.

முதலாவது 20 ஓவர் போட்டி விசாகப்பட்டணத்தில் வருகிற 8-ந்தேதி நடக்கிறது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி வருகிற 11-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணி விவரம்:-

டெய்லர் (கேப்டன்), மேக்குல்லம், வில்லியம்சன், டிரெண்ட் போல்ட், டேனியல் பிளைன், பிரேஸ்வெல், பிராங்ளின், குப்தில், மார்ட்டின், தருண் நேதுலா, ஜித்தன் பட்டேல், சவுத்தி, வான்வியூத், வாக்னர், வாட்லிங்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

காமன்வெல்த்: பளு தூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்

20-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 85 கிலோ ஆண்கள் பிரிவிற்கான பளு தூக்கும் போட்டியில் இந்திய ....»