வடகிழக்கு மக்கள் மீது தாக்குதல்: கர்நாடகாவில் வதந்தி பரப்பிய 5 பேர் கைது || 5 held in Karnataka on the charge of spreading rumours
Logo
சென்னை 11-10-2015 (ஞாயிற்றுக்கிழமை)
வடகிழக்கு மக்கள் மீது தாக்குதல்: கர்நாடகாவில் வதந்தி பரப்பிய 5 பேர் கைது
வடகிழக்கு மக்கள் மீது தாக்குதல்: கர்நாடகாவில் வதந்தி பரப்பிய 5 பேர் கைது
புதுடெல்லி,ஆக.17-
 
வடகிழக்கு மாநில மக்கள் மீது தாக்குதல் நடப்பதாக வெளியான தகவல்களையடுத்து, அவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியிலிருந்து சொந்த ஊர்களுக்கு கூட்டம் கூட்டமாக திரும்பத் தொடங்கினர்.
 
இப்பிரச்சினை பாராளுமன்றத்தில் இன்று எதிரொலித்தது. வடகிழக்கு பகுதி மக்களை அச்சுறுத்தும் வகையில் வதந்தி பரப்புவதற்கு பிரதமர் மன்மோகன்சிங் கண்டனம் தெரிவித்தார். வதந்தி பரப்பவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
 
மேலும் வடகிழக்கு மாநில மக்களின் பாதுகாப்புக்கு மாநில அரசுகள் உறுதி அளித்ததுடன், தங்கள் மாநிலத்திற்கு செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டது.
 
இந்நிலையில் கர்நாடகத்தில் உள்ள வடகிழக்கு மாநில மக்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக வதந்தி பரப்பிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக அம்மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்  டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
வடகிழக்கு மாநில மக்கள் மீதான தாக்குதல் குறித்து வதந்தி பரப்பிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.
 
வடகிழக்கு மக்களுக்கு கர்நாடக மாநிலம் துணை நிற்கும். கர்நாடகத்தில் எந்த சமூகத்தினரிடம் இருந்தும் அவர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை தெரிவித்திருக்கிறோம். முதல் நாளில் 5000 முதல் 6000 பேர் வரை அசாமிற்கு சென்றனர். நேற்றும் 6000 பேர் வரை சென்றனர். ஆனால் இன்று இயல்பு நிலையை உருவாக்கியதால், யாரும் வெளியேறவில்லை.
 
இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்