மருத்துவ சோதனைகளின்போது இந்த ஆண்டு 211 பேர் மரணம்: பாராளுமன்றத்தில் தகவல் || 211 deaths during clinical trials this year
Logo
சென்னை 25-01-2015 (ஞாயிற்றுக்கிழமை)
மருத்துவ சோதனைகளின்போது இந்த ஆண்டு 211 பேர் மரணம்: பாராளுமன்றத்தில் தகவல்
மருத்துவ சோதனைகளின்போது இந்த ஆண்டு 211 பேர் மரணம்: பாராளுமன்றத்தில் தகவல்
புதுடெல்லி,ஆக.17-
 
மருத்துவ சோதனைகளின்போது இந்த ஆண்டு இதுவரை 211 நோயாளிகள் உயிரிழந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
பாராளுமன்றத்தில் இதுதொடர்பான கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் அளித்த எழுத்துப்பூர்வமான பதில் வருமாறு:-
 
நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுளில் மருத்துவ சோதனைகளின்போது, ஒவ்வொரு வாரமும் 11 பேர் வரை இறந்துள்ளதாக அறிக்கை வந்துள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையில் 211 பேர் இறந்துள்ளனர்.
 
2010-ல் இந்த சாவு எண்ணிக்கை 668 ஆகவும், 2011-ல் 438 ஆகவும் குறைந்தது. இதில் முறையே 22 மற்றும் 16 பேர் மட்டுமே பரிசோதனைகளால் இறந்துள்ளனர். மற்ற இறப்புகள் புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுதல் மற்றும் பக்க விளைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிகழ்ந்துள்ளன.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டதாக கூறப்படும் அறிக்கை குறித்து கேட்டபோது, இந்தியாவில் பரிசோதனை இறப்புகள் அதிகம் என்று அறிக்கையில் குறிப்பிடவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் மறுத்துள்ளது என்றார். இருப்பினும் மருத்துவ பரிசோதனை மரணங்களை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்களை சுகாதார அமைச்சகம் எடுத்து வருவதாக குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

திருவனந்தபுரம் அருகே 12 வயது மகளை கற்பழித்த தந்தைக்கு ஆயுள் தண்டனை

திருவனந்தபுரம், ஜன. 25–திருவனந்தபுரம் அருகே உள்ள காரமனை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் குட்டி, (வயது 47), ....»