நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டிற்கு பொறுப்பேற்று பிரதமர் பதவி விலகவேண்டும்: பா.ஜனதா வலியுறுத்தல் || prime minister manmohan singh want to be resign bharathiya jantha demand
Logo
சென்னை 01-10-2014 (புதன்கிழமை)
  • ஜெயலலிதா ஜாமின் மனு இன்று கர்நாடக உயர்நீதி மன்றத்தில் விசாரணை
  • வேலூரில் கனமழை: இடி தாக்கி 2 பேர் பலி
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டிற்கு பொறுப்பேற்று பிரதமர் பதவி விலகவேண்டும்: பா.ஜனதா வலியுறுத்தல்
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டிற்கு பொறுப்பேற்று பிரதமர் பதவி விலகவேண்டும்: பா.ஜனதா வலியுறுத்தல்
புதுடெல்லி,ஆக.17-
 
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் அரசுக்கு ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை குழு தெரிவித்துள்ளது.
 
இதுதொடர்பாக தொடர்பாக பா.ஜ.க. மூத்த தலைவர் அருண் ஜெட்லி கூறுகையில், நிலக்கரி ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பிற்கு தார்மீக, அரசியல் மற்றும் தனிப்பட்ட ரீதியில் பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தினார்.
 
இதேபோல் மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் சுஷ்மா சுவராஜும் பிரதமர் மீது குற்றம் சாட்டினார். பிரதமர் மன்மோகன்சிங் நிலக்கரி துறைக்கு பொறுப்பேற்ற போதுதான் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு நடந்ததாகவும், ஊழல் நடந்ததை ஒரு பொருட்டாக அவர் எண்ணவில்லை என்றும் அவர் கூறினார்.
 
இதேபோன்று 2ஜி, காமன்வெல்த் முறைகேடு நடந்தபோதும் பிரதமர் நடந்துகொண்டதாக சுஷ்மா குற்றம்சாட்டினார்.
 
தற்போது நடந்துள்ள முறைகேடானது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழலான ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடியை மிஞ்சிவிட்டதாக கூறியுள்ள பா.ஜ.க., இவ்விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் பிரச்சினையை கிளப்ப திட்டமிட்டுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

ஐபிஎல் சூதாட்ட வழக்கு: தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல் தேடப்படும் குற்றவாளிகள்

ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ள ஐ.பி.எல். என்னும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கடந்த ஆண்டு சூதாட்டம் நடைபெற்றதாக ....»

160x600.gif
160x600.gif