ஈமு கோழி மோசடி: தப்பிய ஓடிய நிறுவன அதிபர்களை கைது செய்ய நடவடிக்கை ஜெயலலிதா அறிவி்ப்பு || emu cheating owner arrest soon jayalalitha
Logo
சென்னை 28-11-2015 (சனிக்கிழமை)
ஈமு கோழி மோசடி: தப்பிய ஓடிய நிறுவன அதிபர்களை கைது செய்ய நடவடிக்கை- ஜெயலலிதா அறிவி்ப்பு
ஈமு கோழி மோசடி: தப்பிய ஓடிய நிறுவன அதிபர்களை கைது செய்ய நடவடிக்கை- ஜெயலலிதா அறிவி்ப்பு
சென்னை,ஆக.17-
 
முதல் அமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
தமிழ்நாட்டில் ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளாக ஈமு கோழிப் பண்ணைகளில் முதலீடு செய்தால் அதிக அளவு லாபம் ஈட்டலாம் என்று கூறி 36,000-க்கும் மேற்பட்ட பொது மக்களிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை வைப்பு நிதியாக சில ஈமு கோழிப்பண்ணை நிறுவனங்கள் திரட்டின.
 
இவ்வாறு பொதுமக்கள் முதலீடு செய்த தொகைக்கு ஈடாக அவர்களுக்கு ஈமு கோழிக் குஞ்சுகள் கொடுக்கப்பட்டு அதை முதலீட்டாளர்கள் அவர்களது பண்ணையிலேயே வைத்து வளர்க்க வேண்டும்.  அதற்கென மாதம் குறிப்பிட்ட ஒரு தொகை வழங்கப்படும். குறிப்பிட்டக் காலத்திற்குப் பின் வைப்புத் தொகை திரும்ப வழங்கப்படும். 
 
இது மட்டுமல்லாமல், ஈமு கோழிகளை வளர்க்க இடமில்லாதவர்களைப் பொறுத்தவரையில், அந்த பண்ணை நிறுவனங்களே ஈமு கோழிக்குஞ்சகளை வளர்த்து மாதம் குறிப்பிட்ட ஒரு தொகையினை அந்த முதலீட்டாளர்களுக்கு வழங்கி,  குறிப்பிட்ட காலத்திற்குப் பின் முதலீட்டுத் தொகையை திரும்ப வழங்கும் திட்டமும் சில தனியார் நிறுவனங்களால் செயல்படுத்தப்பட்டு வந்தது.
 
இந்தத் திட்டத்தின்படி, மாதா மாதம் வழங்கப்பட வேண்டிய தொகையை ஆகஸ்ட் மாதம் முதல் முதலீடு செய்தவர்களுக்கு மேற்படி நிறுவனங்கள் வழங்கவில்லை.  இதனையடுத்து, இது தொடர்பாக சில ஈமு பண்ணை நிறுவனங்கள் மீது 16 புகார்கள் காவல் துறையினரால் பெறப்பட்டுள்ளன. இந்தப் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 33 நபர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
இதுவரை பணம் வழங்காதமைக்காக 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். இதர குற்றவாளிகள் தலைமறைவாகி விட்டனர்.  இந்தச் சூழ்நிலையில், ஈமு பண்ணையில் முதலீடு செய்தவர்களை ஏமாற்றிய ஈமு பண்ணை நிறுவனங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பது குறித்து இன்று எனது தலைமையில் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  இதில் தலைமைச் செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளத் துறைச் செயலாளர் உட்பட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
 
இதனையடுத்து, தலைமறைவானவர்களை விரைந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு காவல் துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.   மேலும், வைப்பீட்டாளர்களுக்கு பணம் வழங்காத ஈமு பண்ணை நிறுவனங்களின் சொத்துக்களை நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் பறிமுதல் செய்யவும், வைப்புதாரர்களுக்கு அவர்கள் முதலீடு செய்த பணத்தை திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கவும் நான் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
 
இது மட்டுமல்லாமல், இந்த ஈமு பண்ணை நிறுவனதாரர்கள் தலைமறைவாகிவிட்ட காரணத்தாலும், பண்ணையில் பணிபுரிபவர்கள் அங்கிருந்து சென்றுவிட்ட காரணத்தாலும், ஈமு பண்ணைகளில் உள்ள ஈமு கோழிகளை பேணிப் பாதுகாப்பதில் தொய்வு ஏற்பட்டு இதன் காரணமாக ஈமுக் கோழிகள் இறக்கும் சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து, கால்நடை பராமரிப்புத் துறை மூலம் தீவனம் அளித்து அந்தக் கோழிகளை பேணிப் பாதுகாக்க நான் உத்தரவிட்டுள்ளதையடுத்து, கால்நடை பராமரிப்புத் துறை இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
 
இது தவிர, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியிலிருந்தும், கால்நடை பராமரிப்புத் துறையிலிருந்தும் கால்நடை மருத்துவர்கள் இந்தப் பண்ணைகளுக்கு சென்று கோழிகளுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை செய்து கொடுத்துள்ளனர்.  ஈமு கோழிக் குஞ்சுகள் முழு வளர்ச்சி அடைய இன்னும் 3 மாத காலம் ஆகும் என்பதால், அவற்றைப் பராமரிக்கத் தேவையான நிதி வசதியை கால்நடை பராமரிப்புத் துறைக்கு வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். 
 
கோழிக் குஞ்சுகள் முழு வளர்ச்சி அடைந்தவுடன் அவற்றை விற்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அதன் மூலம் பெறப்படும் தொகை கோழித் தீவனச் செலவிற்கு ஈடு செய்யப்பட்டு, மீதத் தொகை வைப்பீட்டாளர்களுக்கு வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.   இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் அந்த இடத்தை உரிமை கொண்டாட முடியாது: ஐகோர்ட் உத்தரவு

எத்தனை ஆண்டுகளாக வசித்து வந்தாலும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் இடங்களை உரிமை கொண்டாட முடியாது என்று ....»