பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு || Bihar state Kapilavastu Buddha bones Buddha sriLankan government
Logo
சென்னை 27-11-2015 (வெள்ளிக்கிழமை)
பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு
பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு
புதுடெல்லி, ஆக. 17-

உலக மதங்களில் பழமையானது புத்தமதம். இதை தோற்றுவித்தவர் கவுதம புத்தர். இந்தியாவில் தோன்றிய புத்த மதம் சீனா, இலங்கை ஆகிய நாடுகளில் தேசிய மதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான், மியான்மர் நாடுகளிலும் புத்தமதம் பரவியுள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் ஒரு பகுதியில் ஷாக்கிப் மன்னர் பரம்பரை ஆட்சி செய்தது. அந்த பரம்பரையின் வழித்தோன்றல் கவுதம புத்தர். இவரது இயற்பெயர் சித்தார்த்தனன்.

மனிதனுக்கு இறப்பு இருப்பது தெரியாமல் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்த அவர் ஒருநாள் சவ ஊர்வலத்தை பார்த்து மனம் மாறுகிறார். மனிதனின் துன்பங்களுக்கு எல்லாம் அடிப்படை காரணம் ஆசைதான். எனவே ஆசையை ஒழித்து விட்டால் இறைவனை காணலாம் என போதித்த புத்தர், உலக வாழ்வின் இன்பங்களை துறந்து கயா என்ற இடத்தில் உள்ள போதி மரத்தடியில் தவம் இருந்து ஞானம் பெற்றார்.

அந்த நாட்களில் இந்தியாவை ஆண்ட அசோக மன்னர் புத்தமத நெறியை பின்பற்றியே ஆட்சி நடத்தினார். புத்த மதத்தை உலகம் முழுவதும் பரப்ப போதகர்களை நியமித்து மடங்களையும் நிறுவினார்.

இலங்கை, சீனா, ஜப்பான் வழியாக புத்த மதம் ஆசிய கண்டம் முழுவதும் பரவி, இந்து மதத்தைபோல் வளர்ந்து நிலைத்தது. மரணத்திற்கு பின் புத்தரின் உடல் கபிலவஸ்து (தற்போதைய பீகார் மாநிலம்) என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த இடத்தை புத்த மதத்தினர் புனித இடமாக வழிபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே, இந்தியா வந்திருந்தபோது புத்தரின் சமாதியில் உள்ள அவரது சிதைந்த எலும்புகளை எங்கள் நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதனை ஏற்று புத்தரின் எலும்புகளை இலங்கைக்கு வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது. மத்திய பண்பாட்டு துறை மந்திரி செல்ஜா, இலங்கைக்கு சென்று புத்தரின் எலும்புகளை ஒப்படைக்கிறார். நாளை மறுநாள் இலங்கையில் தொடங்க உள்ள கண்காட்சியில் புத்தரின் எலும்புகள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

இதுபற்றி மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, அண்டை நாடுகளின் இதுபோன்ற கோரிக்கைகளை இந்தியா வெகு அரிதாகவே நிறைவேற்றுகிறது. இலங்கையுடனான நமது உறவு எவ்வளவு நெருக்கமானது என்பதற்கு புத்தரின் எலும்புகளை நம் நாட்டு மந்திரி நேரில் சென்று வழங்குவது நல்ல உதாரணம் என்றார்.

புத்தரின் எலும்புகளை ஒப்படைப்பதற்கு இலங்கை தமிழர் இயக்கங்களின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய மந்திரி ஒருவர் புத்தரின் எலும்புகளை ஒப்படைக்க இலங்கைக்கு செல்வதை ம.தி.மு.க. தலைவர் வைகோவும் எதிர்த்துள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

சபரிமலை கோவில் பகுதியில் லாட்டரி விற்க தடை: கேரள ஐகோர்ட்டு உத்தரவு

திருவனந்தபுரம், நவ. 27–பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜையையொட்டி நடை திறக்கப்பட்டு ....»