நாட்டின் எந்த பகுதியிலும் வடகிழக்கு மாநிலத்தவர் வாழ உரிமை உண்டு: பிரதமர் மன்மோகன்சிங் பேச்சு || country any place north east peoples living prime minister manmohan
Logo
சென்னை 04-09-2015 (வெள்ளிக்கிழமை)
நாட்டின் எந்த பகுதியிலும் வடகிழக்கு மாநிலத்தவர் வாழ உரிமை உண்டு: பிரதமர் மன்மோகன்சிங் பேச்சு
நாட்டின் எந்த பகுதியிலும் வடகிழக்கு மாநிலத்தவர் வாழ உரிமை உண்டு: பிரதமர் மன்மோகன்சிங் பேச்சு
புதுடெல்லி, ஆக. 17-

பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று வடகிழக்கு மாநில மக்கள் மீதான தாக்குதல் பீதி பற்றிய விவகாரம் எதி ரொலித்தது. பகல் 11 மணிக்கு இரு அவைகளும் கூடியதும், வடகிழக்கு மாநில மக்கள் வெளியேறுவது பற்றி விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வற்புறுத்தினார்கள்.

இதைத் தொடர்ந்து பாராளுமன்ற மக்களவை இரண்டிலும் முதலில் நடக்க இருந்த கேள்வி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. பிறகு, வடகிழக்கு மாநில மக்களிடம் ஏற்பட்டுள்ள பீதி தொடர்பாக ஒவ்வொரு கட்சிகள் சார்பில் பேச வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் சரமாரியாக அரசு மீது குற்றம்சாட்டி பேசின. இந்த விவாதத்தில் தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. பங்கேற்று பேசியதாவது:-

தொழில்நுட்பம், அறிவியலுக்கு பின்னால் நாம் போக முடியாது. எலெக்ட்ரானிக் மற்றும் சமூக மீடியாக்களை அதிக பொறுப்புள்ளவர்களாக உருவாக்க முடியும். பாதுகாப்பு என்பது குறுகிய காலத்தில் செய்யக்கூடிய விசயமாகும்.

இந்த பிரச்சினைக்கு உண்மையான புரிந்துணர்வும், பரஸ்பரம் மரியாதையுமே தீர்வாகும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதில் நாம் பெருமை கொள்கிறோம். அந்த ஒற்றுமை புரிந்து கொள்ளுதல் மற்றும் வேற்றுமைகளுக்கு மதிப்பு அளிப்பதன் மூலம் ஏற்படும்.

நான் இந்தியன் என்பதால், நாட்டில் எந்தப் பகுதியில் வாழவும் எனக்கு உரிமை உண்டு. ஆனால், சொந்த நாட்டிலேயே மக்கள் அகதிகள் போல் வாழ்கின்ற நிலை உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

குருதாஸ் தாஸ்குப்தா (கம்யூனிஸ்டு) பேசியதாவது:-

இளைஞர்கள்தான் குறி வைத்து தாக்கப்படுகின்றனர் இது, வடகிழக்கு மாநிலத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளின் மீது ஒரு விளைவை ஏற்படுத்தி விடும். அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இனிப்பான வார்த்தைகள் எந்த பலனையும் அளிக்காது. நாடு முழுவதும் அமைதி நிலவவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்திய கலாச்சாரத்தில் இனப் பாகுபாட்டுக்கு இடமில்லை. இ

வ்வாறு அவர் பேசினார்.

ராம்விலாஸ் பாஸ்வான் பேசுகையில்:-

வடகிழக்கு மாநிலத்தவர் வேலைக்காக பிற மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது ஏன்? அங்கு வேலை வாய்ப்பும், நல்ல கல்வி பெறும் வசதியும் ஏற்படுத்தி தரப்படவில்லை. வடகிழக்கு மாநில மக்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, அந்த பகுதியில் அதிக பள்ளிகளை திறக்க வேண்டுமென, மனிதவள துறை மந்திரி கபில்சிபலை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினர்.

இதற்கு பிரதமர் மன்மோகன்சிங் பதில் அளித்து பேசியதாவது:-

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் வடகிழக்கு மாநில மக்கள், தங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதாக கருதி, அங்கிருந்து வெளியேறுகின்றனர். வதந்திகளால் ஏற்பட்ட அச்ச உணர்வு ஆகும். அச்சுறுத்தல் ஏற்படும்படியாக பரப்பப்பட்ட வதந்தி கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

மேலும் காலம் தாமதிக்காமல், நாம் அனைவரும் ஒன்றிணைந்து தற்போதுள்ள சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த மக்கள் நாட்டின் எந்தவொரு பகுதியில் வாழவும், வசிக்கவும், பணிபுரியவும் முழு உரிமை உண்டு.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் வடகிழக்கு மாநில மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க, எல்லா வகையிலும் நாம் தயாராக இருப்பதாக அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும், உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

ஒருநாள் ஆசிரியர்: மாணவர்களுக்கு பாடம் நடத்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

புதுடெல்லி, செப். 4–ஆசிரியர் தினத்தையொட்டி பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ....»