வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா: திருச்சி வேளாங்கண்ணிக்கு கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்கம் || velangkanni peralayam festival thiruchi velangkanni extra special train
Logo
சென்னை 15-02-2016 (திங்கட்கிழமை)
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா: திருச்சி-வேளாங்கண்ணிக்கு கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்கம்
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா: திருச்சி-வேளாங்கண்ணிக்கு கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்கம்
திருச்சி, ஆக. 17-  
 
தெற்கு ரெயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் கோபிநாத் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-  
 
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக வருகிற 29-ந்தேதி முதல் செப்டெம்பர் 8-ந்தேதி வரை சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
 
ரெயில்கள் விவரம் வருமாறு:-
 
திருச்சி-வேளாங்கண்ணி (வண்டி எண்.06803) விரைவு ரெயில். திருச்சியில் இருந்து முற்பகல் 11.45 மணிக்கு புறப்பட்டு பொன்மலை, திருவெறும்பூர், பூதலூர், தஞ்சை, நீடாமங்கலம், திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு பிற்பகல் 3.15 மணிக்கு சென்றடையும்.
 
எதிர் தடத்தில் வேளாங்கண்ணி-திருச்சி (வண்டி எண்.06804) விரைவு ரெயில் வேளாங்கண்ணியில் இருந்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு நாகப்பட்டினம், திருவாரூர், நீடாமங்கலம், தஞ்சை, பூதலூர், திருவெறும்பூர், பொன்மலை வழியாக திருச்சிக்கு இரவு 7.35 மணிக்கு வந்தடையும். இந்த ரெயில்கள் 8 பெட்டிகளுடன் வருகிற 29-ந்தேதி முதல் செப்டெம்பர் 8-ந் தேதி வரை இயக்கப்படும்.  
 
மேலும் வேளாங்கண்ணி-நாகப்பட்டினம் வேளாங்கண்ணி இடையே பயணிகள் ரெயில் வருகிற 29-ந் தேதி முதல் செப்டெம்பர் 8-ந் தேதி வரை இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் வேளாங்கண்ணியில் இருந்து (வண்டி எண்.06805) பகல் 12.30 மணிக்கு புறப்பட்டு 12.55 மணிக்கு சென்றடையும். எதிர் தடத்தில் நாகப்பட்டினத்தில் இருந்து (வண்டி எண். 06806) பகல் 1.55 மணிக்கு புறப்பட்டு 2.20 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.
 
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif