கூடங்குளத்தில் இருந்து அடுத்த ஆண்டு தான் மின்சாரம் கிடைக்கும்: கரூரில் விஜயகாந்த் பேச்சு || power available next year from kudankulam
Logo
சென்னை 25-10-2014 (சனிக்கிழமை)
கூடங்குளத்தில் இருந்து அடுத்த ஆண்டு தான் மின்சாரம் கிடைக்கும்: கரூரில் விஜயகாந்த் பேச்சு
கூடங்குளத்தில் இருந்து அடுத்த ஆண்டு தான் மின்சாரம் கிடைக்கும்: கரூரில் விஜயகாந்த் பேச்சு
கரூர், ஆக.17-
 
தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் தனது பிறந்த நாளை முன்னிட்டு மக்களுக்காக மக்கள் பணி என்ற திட்டம் தொடங்கி  உள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக  ஏழை, எளியவர்களுக்கு  நலத்திட்ட உதவிகள்  வழங்கி வருகிறார். அதன்படி நேற்று மாலை கரூர் 80- அடி ரோட்டில் தே.மு.தி.க. சார்பில் கால்நடைகளுக்கு தேவையான  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
 
இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் என்.எஸ்.கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.பிரேமலதா விஜயகாந்த் சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில்  தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் கரூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 500 பேர்களுக்கு  ரூ.20 லட்சம் மதிப்பிலான கால் நடைகளுக்கு தேவையான  நலத்திட்ட உதவிகளைவழங்கி சிறப்புரையாற்றினார்.
 
அப்போது அவர் கூறியதாவது:-
 
சுதந்திர தின விழாவில் பேசிய முதல்வர்  ஜெயலலிதா ஏற்கனவே சொன்ன திட்டங்களை மீண்டும் அறிக்கை கலவையாக  கூறி உள்ளார். கரூர் என்றால் ஜவுளி, பஸ் பாடி, கொசுவலை நினைவுக்கு வரும். அடுத்து நினைவுக்கு வருவது மணல். கடந்த ஆட்சியை போல் இந்த ஆட்சியிலும் மணல் கொள்ளை நடக்கிறது. தமிழகத்தில் இருந்து கடத்தப்படும் மணல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு செல்கிறது. ஆனால் அங்கு இருந்து தண்ணீர் மட்டும் கிடைக்கவில்லை. கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து  விரையில் மின்சாரம் பெறப்படும் என்று முதல்வரும், வரும் 25-ந்தேதியிலிருந்து மின்சாரம் கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் நாராணசாமியும்  கூறுகின்றனர்.
 
ஆனால் கூடங்குளத்திலிருந்து அடுத்த ஆண்டுதான் நமக்கு மின்சாரம் கிடைக்கும்.
 
இவ்வாறு விஜயகாந்த் பேசினார். 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

section1

சீர்காழி அருகே கோவில் விழாவில் கோஷ்டி மோதல்

சீர்காழி, பிப். 8–சீர்காழி ஈசானி தெருவில் உள்ள வடபாதி மாரியம்மன் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif