பாபா ராம்தேவ் ஆசிரமத்தில் சுகாதார துறை அதிகாரிகள் சோதனை || health department officer raind in ramdev ashram
Logo
சென்னை 21-12-2014 (ஞாயிற்றுக்கிழமை)
பாபா ராம்தேவ் ஆசிரமத்தில் சுகாதார துறை அதிகாரிகள் சோதனை
பாபா ராம்தேவ் ஆசிரமத்தில் சுகாதார துறை அதிகாரிகள் சோதனை
டெல்லி, ஆக.17-
 
வெளிநாடுகளில் இருக்கும் கறுப்பு பணத்தை மீட்க வேண்டும் என யோகா குரு பாபா ராம்தேவ் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகிறார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஆதரவாளர்களுடன் கடந்த 9-ந்தேதி முதல் 6 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.
 
இவரது உண்ணாவிரத்தை மத்திய அரசு கண்டு கொள்ளாததால் பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தினார். இதையடுத்து ராம்தேவையும், அவரது ஆதவாளர்களையும் போலீசார் கைது பாராளுமன்றம் அருகே உள்ள அம்பேக்தார் மைதானத்தில் வைத்திருந்தனர். பின்னர் விடுதலை செய்தபோதும் அதே இடத்தில் போராட்டத்தை தொடர்ந்தனர். மறுநாள் சுதந்திர தினம் என்பதால் மைதானத்தை காலி செய்யும்படி போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். எனவே உண்ணாவிரத்தை முடித்து கொண்ட அவர் தொடர்ந்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார்.
 
இந்நிலையில் அவரது ஆசிரமத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். பாபா ராம்தேவ் வெளிநாடுகளுக்கு மூலிகை மருந்துகள் தயாரித்து அனுப்பி வருகிறார். இதில் கலப்படம் செய்வதாக அதிகாரிகளுக்கு வந்த புகார்களை அடுத்து இந்த சோதனை நடந்ததாக அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கின்றன. 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்