சிவகாசி அருகே டெங்கு காய்ச்சலுக்கு 2 குழந்தைகள் பலி: 8 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி || sivakasi dengue fever two child dead
Logo
சென்னை 01-09-2014 (திங்கட்கிழமை)
  • விழுப்புரம்: செஞ்சி அருகே ஆசிரியர் வீட்டில் 80 சவரன் நகை கொள்ளை
  • ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேவுடன் பிரதமர் மோடி இன்று அதிகாரப்பூர்வ சந்திப்பு
  • பெட்ரோல் விலையை தொடர்ந்து டீசல் விலையும் குறைக்கப்படும்: ராஜ்நாத் சிங்
  • முல்லை பெரியாறு அணையில் ஆய்வு நடத்த 5 பேர் குழு புறப்பட்டது
  • இன்று முதல் 21 சுங்கச்சாவடிகளில் 15 சதவீதம் கட்டணம் உயர்வு
  • மவுலிவாக்கம் கட்டட விபத்து: மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
  • தாத்ரா வாகன ஒப்பந்தம்: தேஜிந்தர் சிங் ஜாமின் மனு தள்ளுபடி-கைது
  • ஐ.பி.எல். சூதாட்ட வழக்கை 2 மாதங்களில் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
சிவகாசி அருகே டெங்கு காய்ச்சலுக்கு 2 குழந்தைகள் பலி: 8 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
சிவகாசி அருகே டெங்கு காய்ச்சலுக்கு 2 குழந்தைகள் பலி: 8 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
விருதுநகர், ஆக. 16-
 
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது வேண்டுவராயபுரம் கிராமம். இப்பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மகள் காளிஸ்வரி (வயது 4) மற்றும் அதே பகுதியை சேர்ந்தவர் மான்ராஜ் இவரது 4 மாத ஆண் குழந்தை காளிஸ்வரன் இவர்கள் இருவருக்கும் கடந்த 2 வாரமாக தொடர் காய்ச்சல் இருந்து வந்தது.
 
இதையடுத்து மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக 2 குழந்தைகளும் சேர்க்கப்பட்டனர். அங்கு ரத்த பரிசோதனையில் 2 குழந்தைகளுக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
 
எனினும் கடந்த சில நாட்களுக்கு முன்பு 4 மாத ஆண் குழந்தை காளிஸ்வரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். நேற்று காலை காளிஸ்வரியும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள். டெங்கு காய்ச்சலுக்கு 2 குழந்தைகள் பலியானதால் வேண்டுவராயபுரம் கிராமத்தில் மக்களி டையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
 
மேலும் அதே கிராமத்தை சேர்ந்த நிறைபாண்டியன் (12) முத்துபாண்டி (16) கருப்பசாமி (8) உமா மகேஸ்வரி (6) சக்திஸ்வரி (3) சேர்வார்முத்து (10) மணிகண்டன் (8) உள்பட 8 குழந்தைகள் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிவகாசியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 
டெங்கு காய்ச்சல் குறித்து வேண்டுவராயபுரம் கிராம மக்கள் கூறியதாவது:-
 
எங்கள் பகுதியில் கடந்த 1 மாதமாக குழந்தைகள் உள்பட பலருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. டெங்கு காய்ச்சலை தடுக்க பலமுறை சுகாதார அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தற்போது உயிர் இழப்புகள் ஏற்பட்டு வருகிறது என்று குற்றம்சாட்டினர்.
 
இதற்கிடையே நேற்று மாலை விருதுநகர் மாவட்ட சுகாதார குழுவினர் வேண்டுவராயபுரம் கிராமத்தில் முகாமிட்டு டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து உள்ளனர். வீடு வீடாக சென்று மருந்து மாத்திரைகள் வழங்கினர். பல இடங்களில் கொசு மருந்துகள் அடிக்கப்பட்டு வருகிறது.
 
நெல்லை உள்பட தென் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் கட்டுப் படுத்தப்பட்டு வந்த நிலையில் மீண்டும் விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி உள்ளது. பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விருதுநகர்

section1

அருப்புக்கோட்டையில் கிரிக்கெட் விளையாட்டில் மாணவர்கள் மோதல்: 28 பேர் மீது வழக்கு

பாலையம்பட்டி, செப். 1– அருப்புக்கோட்டை தம்மாள்தெரு பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் முத்துராம லிங்கம் (வயது19), ....»

300x100.jpg