புதுவையில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவரின் வீட்டில் வெடிகுண்டு வீச்சு: மர்ம வாலிபர்களுக்கு வலைவீச்சு || Pondicherry french citizen house bomb throwing
Logo
சென்னை 20-12-2014 (சனிக்கிழமை)
  • கங்கை அமரன், குட்டி பத்மினி , நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் பா.ஜனதாவில் இணைந்தனர்
  • ஐந்தாம் கட்ட தேர்தல்: காஷ்மீரில் 76 சதவீதம்-ஜார்க்கண்டில் 71 சதவீதம் வாக்குகள் பதிவு
  • ஜார்க்கண்டில் பா.ஜனதா அதிக இடம் பிடிக்கும்: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தகவல்
  • சி.ஆர்.பி.எப்.-ன் புதிய டைரக்டர் ஜெனரலாக பிரகாஷ் மிஸ்ரா நியமிக்கப்படுகிறார்
  • ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தகவல்
புதுவையில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவரின் வீட்டில் வெடிகுண்டு வீச்சு: மர்ம வாலிபர்களுக்கு வலைவீச்சு
புதுவையில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவரின் வீட்டில் வெடிகுண்டு வீச்சு: மர்ம வாலிபர்களுக்கு வலைவீச்சு
புதுச்சேரி, ஆக. 16-

புதுவையின் மைய பகுதியில் பரபரப்பு மிகுந்த நகர பகுதி தம்புநாயக்கன் வீதி ஆகும். இங்கு வசிப்பவர் டேனிஸ் வியாகுலமேரி (வயது 72). பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். இவரது கணவர் விக்டர் நேரு இறந்துவிட்டார். இவர்களுக்கு 1 மகன், 4 மகள்கள் உள்ளனர்.

இவர்கள் திருமணமாகி பிரான்சில் வசித்து வருகின்றனர். டேனிஸ்மேரி தனது உறவினர்களுடன் புதுவையில் உள்ளார். இந்த நிலையில் தனது கணவரின் தம்பி மகன் அருண் மரியநாதனை வளர்ப்பு மகனாக வளர்ந்து வந்தார்.

ஆனால் அவரது நடவடிக்கைகள் பிடிக்காததால் சில ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு அனுப்பி விட்டார். இதனால் அடிக்கடி அருண்மரியநாதன், டேனிஸ்மேரி வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன் பிரான்சிலிருந்து டேனிஸ்மேரியின் மகன், மகள்கள் புதுவை வந்தனர். அவர்களுடன் நேற்று மாலை 6 மணிக்கு நெல்லித்தோப்பு மாதாகோவில் விழாவிற்கு அவர் சென்றுவிட்டார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த 2 மர்ம வாலிபர்கள் பூட்டிக்கிடந்த டேனிஸ்மேரியின் வீட்டுச் சுவரில் வெடிகுண்டு வீசினர். அதில் பெரிய அளவில் சேதம் ஏற்படாததால் மேலும் ஒரு வெடிகுண்டு ஒன்றை வீசினர். இதனால் ஜன்னல், கண்ணாடிகள் நொறுங்கியது.

உடனே அந்த மர்ம வாலிபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பியோடி விட்டனர். இதில் வீட்டிற்கு அருகில் இருந்த சுந்தரம்மாள் காயம் அடைந்தார். அவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்து டேனிஸ்மேரி வீட்டிற்கு வந்தார். சம்பவ இடத்திற்கு பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் அங்கப்பன், சப்-இன்ஸ்பெக்டர் சஜீத் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் வெடிகுண்டு நிபுணர்களும் வந்து சிதறி கிடந்த வெடிமருந்து துகள்களை சேகரித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம வாலிபர்களை தேடிவருகின்றனர். பரபரப்பு மிகுந்த நகர பகுதியில் நடந்துள்ள இந்த சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - புதுச்சேரி

section1

திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோவிலில் நடிகர் ஜெயம்ரவி சாமி தரிசனம்

காரைக்கால் திருநள்ளாறில் சனீஸ்வர பகவான் கோவிலில் கடந்த 16–ந்தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. சுமார் 5 ....»