மாடல் அழகி லீனா செக்ஸ் புகார்: பாகிஸ்தான் நடுவர் மீது போலீஸ் நடவடிக்கை? விசாரணை தொடங்கியது || Models leena torture complaint pakistan cricket umpire police enquiry
Logo
சென்னை 06-03-2015 (வெள்ளிக்கிழமை)
மாடல் அழகி லீனா செக்ஸ் புகார்: பாகிஸ்தான் நடுவர் மீது போலீஸ் நடவடிக்கை?- விசாரணை தொடங்கியது
மாடல் அழகி லீனா செக்ஸ் புகார்: பாகிஸ்தான் நடுவர் மீது போலீஸ் நடவடிக்கை?- விசாரணை தொடங்கியது
மும்பை, ஆக. 16-
 
பாகிஸ்தானை சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் நடுவர் ஆசாத் ரவூப். ஐ.சி.சி எலைட் நடுவர் குழுவில் இடம் பெற்றுள்ள அவர் சிறந்த நடுவர்களில் ஒருவர் ஆவார். நடுவர் ஆசாத் ரவூப் மீது மும்பை மாடல் அழகி லீனா கபூர் செக்ஸ் புகார் கூறியுள்ளார்.
 
தன்னை 2-வதாக திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி கற்பழித்ததாக அவர் அந்த புகாரில் கூறியுள்ளார். அதோடு அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டார். நடுவர் ஒருவர் மீது மாடல் அழகி செக்ஸ் புகார் கூறியது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
 
ஆனால் இதை நடுவர் ஆசாத் ரவூப் மறுத்து உள்ளார். லீனா கபூருடன் இருக்கும் புகைப்படம் உண்மைதான். ஆனால் அவருடன் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார். மலிவான விளம்பரத்துக்காக தன் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறியுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
 
இதற்கிடையே லீனா கபூர் கொடுத்த புகார் மனுவை வெர்சோவா போலீஸ் ஏற்றுக்கொண்டது. அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்த தொடங்கினர். இதனால் ஆசாத் ரவூப் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. வெளிநாட்டை சேர்ந்தவர் என்பதால் அந்நாட்டின் அனுமதி பெற்று தான் விசாரணையை தொடங்க இயலும்.
 
ஐ.சி.சி. எலைட் குழுவில் இடம் பெற்றுள்ள நடுவர் மீது புகார் கூறப்படுவது இதுவே முதல் முறையாகும். இதனால் அவர் மீது ஐ.சி.சி. நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ஐ.சி.சி. நிர்வாகி ஒருவர் கூறும்போது, இது அவரது தனிப்பட்ட விஷயம்.
 
இதற்கும், ஐ.சி.சி.க்கும் சம்மந்தம் இல்லை என்றார். ஆசாத் ரவூப் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் இங்கிலாந்து தொடரில் நடுவராக பணியாற்றுகிறார். அவர் 44 டெஸ்ட், 95 ஒருநாள் போட்டி மற்றும் 17 இருபது ஓவர் போட்டிக்கு நடுவராக பணியாற்றி உள்ளார். 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

சீனாவில் ரயில் நிலையத்தில் 9 பயணிகளுக்கு கத்திகுத்து: கொடூரமான செயலில் ஈடுபட்டவரை சுட்டுக்கொன்றது சீன போலீஸ்

சீன தலைநகர் பீஜிங் அருகே உள்ள ரெயில் நிலையத்தில் 9 பயணிகளை சரமாரியாக கத்தியால் குத்தியவரை ....»

amarprakash160600.gif
amarprakash160600.gif