ஆந்திரா தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 3 பேர் பரிதாப சாவு: 12 பேரின் உடல் வெந்தது || Boiler Blast in an Andhra Pradesh Factory
Logo
சென்னை 07-10-2015 (புதன்கிழமை)
ஆந்திரா தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 3 பேர் பரிதாப சாவு: 12 பேரின் உடல் வெந்தது
ஆந்திரா தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 3 பேர் பரிதாப சாவு: 12 பேரின் உடல் வெந்தது
ஐதராபாத்,ஆகஸ்ட்.15-
 
ஆந்திர மாநிலம் மெகபூப்நகர் மாவட்டம் ஷாத் நகர் அருகில் உள்ள ஒரு இரும்புத் தொழிற்சாலையில் இன்று சுமார் 20 தொழிலாளர்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். இரும்பை உருக்கும் பணியில் ஈடுபட்டபோது, திடீரென பாய்லர் வெடித்து சிதறியது.
 
இதனால் கடும் கொதிநிலையில் உள்ள திரவ இரும்புத் தாது தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதனால் தொழிலாளர்கள் உடல் வெந்து அலறித் துடித்தனர். இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 12 பேர் பலத்த தீக்காயங்களுடன் உஸ்மானியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் சிக்கிய தொழிலாளர்களில் உத்தர பிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்தவர்களே அதிகம்.
 
இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

மாட்டுக்கறி பற்றிய கருத்து: லாலு பிரசாத் மீது வழக்கு பதிவு

இந்துக்களால் தெய்வமாக போற்றப்படும் பசு மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், பசுவதை தடைச்சட்டம் ....»

VanniarMatrimony_300x100px_2.gif