தேஷ்முக் உடல் குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம்: பிரதமர் மன்மோகன்சிங் சோனியா பங்கேற்பு || Thousands bid tearful adieu to Vilasrao Deshmukh
Logo
சென்னை 10-02-2016 (புதன்கிழமை)
தேஷ்முக் உடல் குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம்: பிரதமர் மன்மோகன்சிங்-சோனியா பங்கேற்பு
தேஷ்முக் உடல் குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம்: பிரதமர் மன்மோகன்சிங்-சோனியா பங்கேற்பு
பாபல்கான், ஆக. 15-

கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் சென்னையில் நேற்று காலமானார். அவரது உடல், மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான பாபல்கான் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி, மத்திய அமைச்சர்கள் சுஷில்குமார் ஷிண்டே, சரத்பவார், பிரபுல் படேல், வயலார் ரவி, ராஜீவ் சுக்லா, முகுல் வாஸ்னிக் மற்றும் மகாராஷ்டிர மாநில ஆளுநர் சங்கரநாராயணன், முதல்வர் பிருத்விராஜ் சவான், துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் பாலிவுட் நடிகர்-நடிகைகள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

அதன்பின்னர் இன்று மாலை 4 மணியளவில் தேஷ்முக்கின் உடல், அவரது குடும்பத்திற்கு சொந்தமான பண்ணை அருகில் குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவரது மூத்த மகனும் லத்தூர் எம்.எல்.ஏ.வுமான அமித் இறுதிச்சடங்குகளை செய்து, சிதைக்கு தீ மூட்டினார்.

முன்னதாக விமான நிலையத்திலிருந்து தேஷ்முக்கின் உடலை கொண்டு வரும் வழி நெடுக அவரது திரண்ட பொதுமக்கள், அவரது உடலை கடைசியாக ஒருமுறை பார்க்க வேண்டும் என கண்ணீர் மல்க காத்திருந்தனர். கிட்டத்தட்ட 13 கிலோ மீட்டர் தொலைவிற்கு பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் திரண்டு நின்றதால், மிகவும் சிரமப்பட்டே, பாபல்கான் கிராமத்தைச் சென்றடைய முடிந்தது. லத்தூர் நகரில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

60 வினாடிகளில் 82 தண்டால்: இந்தியாவின் புருஸ் லீ புதிய உலக சாதனை - வீடியோ இணைப்பு

இந்தியாவை சேர்ந்த கராத்தே மாஸ்டரான ஜோசப் என்பவர் 60 வினாடிகளில் 82 தண்டால்கள் (knuckle pushups) ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif