குஜராத்தில் குட்கா விற்பனை செய்ய தடை: செப்டம்பர் 11 ம் தேதி முதல் அமல் || Gutka to be banned in Gujarat from September 11 Modi
Logo
சென்னை 06-03-2015 (வெள்ளிக்கிழமை)
குஜராத்தில் குட்கா விற்பனை செய்ய தடை: செப்டம்பர் 11-ம் தேதி முதல் அமல்
குஜராத்தில் குட்கா விற்பனை செய்ய தடை: செப்டம்பர் 11-ம் தேதி முதல் அமல்
ஹுனாகாத், ஆக. 15-
 
குஜராத் மாநிலத்தில் செப்டம்பர் 11-ம் தேதி முதல் போதைப்பொருளான குட்காவுக்கு தடை விதிக்கப்படும் என்று முதல் அமைச்சர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
 
இதுதொடர்பாக மோடி தனது சுதந்திர தின உரையில் கூறியதாவது:-
 
குஜராத் மாநிலத்தில் உள்ள இளைஞர்களை புற்றுநோயிலிருந்து காப்பாற்றும் நடவடிக்கையாக குட்காவுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குட்கா தயாரிப்பு, விற்பனைக்கான முழு தடை வரும் செப்டம்பர் 11-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
 
இளைஞர்கள் குட்கா பயன்படுத்துவதை ஊக்குவிக்க முடியாது. இந்த குட்காவிற்கான செலவை கணக்கிட்டு பார்த்தால், பாதாம் விலையை விட அதிகம். குட்காவிற்கான தடை அமலுக்கு வரும்போது, கையிருப்பில் உள்ள குட்கா அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
இதேபோல் மகாராஷ்டிர மாநிலம் அரசு சமீபத்தில குட்கா மற்றும் பான் மசாலாவிற்கு தடை விதித்தது. கேரளா, மத்திய பிரதேசம் மற்றும் பீகாரில் குட்கா தடை செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் அரசு கடந்த மாதம் இப்பொருட்களை உற்பத்தி செய்ய தடை விதித்தது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

ஜம்மு–காஷ்மீரில் பனிப்பொழிவில் சிக்கிய 220 பேர் மீட்பு: விமானப்படை நடவடிக்கை

ஜம்மு, மார்ச். 6–ஜம்மு–காஷ்மீர் மாநிலத்தில் கிஷ்த்வார் மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு உள்ளது.இந்த நிலையில், அந்த மாவட்டத்தில் ....»

amarprakash160600.gif
amarprakash160600.gif