சென்னையில் சிகிச்சை பெற்ற மத்திய மந்திரி தேஷ்முக் மரணம்: பாராளுமன்றம் ஒத்திவைப்பு || central minister chennai treatment deshmukh dead
Logo
சென்னை 01-11-2014 (சனிக்கிழமை)
  • ஏடிஎம் கார்டை 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் ரூ. 20 கட்டணம்: இன்று முதல் அமல்
  • தமிழகத்தில் 3 நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
  • அபுதாபியிலிருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்
  • மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101 அடியாக உயர்வு
சென்னையில் சிகிச்சை பெற்ற மத்திய மந்திரி தேஷ்முக் மரணம்: பாராளுமன்றம் ஒத்திவைப்பு
சென்னையில் சிகிச்சை பெற்ற மத்திய மந்திரி தேஷ்முக் மரணம்: பாராளுமன்றம் ஒத்திவைப்பு
சென்னை, ஆக. 14-
 
மத்திய மந்திரியாக இருந்த விலாஸ்ராவ் தேஷ்முக் (67) கல்லீரலில் புற்றுநோய் ஏற்பட்டது. சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டன. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மும்பையில் உள்ள பிரீச் ஹேன்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
 
அவருக்கு கல்லீரல்மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இந்த அறுவை சிகிச்சையில் புகழ் பெற்ற சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் தேஷ் முக்கை அனுமதிக்க முடிவு செய்தனர். கடந்த 6-ந்தேதி ஆம்புலன்ஸ் விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட தேஷ்முக் உடனடியாக குளோபல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
 
அவரது உடல் நிலையை கல்லீரல்மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முகமது ராலே தலைமையிலான மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர். இன்று காலை அவருக்கு கல்லீரல்மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டது.
 
உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருந்த தேஷ்முக்கை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வந்தனர். இன்று பிற்பகலில் அவரது நிலைமை மிகவும் மோசமானது. டாக்டர்கள் தொடர்ந்து சகிச்சை அளித்தனர். என்றாலும் பலனின்றி அவர் மரணம் அடைந்தார். இத்தகவல் கிடைத்ததும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பாராளுமன்றத்தின் இரு அவைகளும்  ஒத்திவைக்கப்பட்டன. அவரது உடல் சொந்த ஊரான மும்பைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

திமுகவுடன் வைகோ சேர கூடாது: தமிழருவி மணியன் பேட்டி

ஈரோடு, நவ. 1–காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன் ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது:–தமிழகத்தில் தேசிய ....»