கடுமையான விதிமுறைகள் பாதுகாப்பு நடவடிக்கை: தனியார் பள்ளி பஸ், வேன்கள் நிறுத்தம் || regulation protection action private bus van stopped
Logo
சென்னை 02-08-2015 (ஞாயிற்றுக்கிழமை)
கடுமையான விதிமுறைகள்-பாதுகாப்பு நடவடிக்கை: தனியார் பள்ளி பஸ், வேன்கள் நிறுத்தம்
கடுமையான விதிமுறைகள்-பாதுகாப்பு நடவடிக்கை: தனியார் பள்ளி பஸ், வேன்கள் நிறுத்தம்
சென்னை, ஆக. 14-

பள்ளி சிறுமி சுருதி பஸ்சின் ஓட்டை வழியாக கீழே விழுந்து பலியான சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகள் மீது பிடி இறுக்கியது.

போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். பள்ளிக் குழந்தைகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லக்கூடாது. நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தீவிர சோதனை செய்து, விதிமுறைகளை மீறிய வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்கிறார்கள்.

மேலும் பள்ளி வாகனங்களுக்கு விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும். புதிய விதிகள் உருவாக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு, அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகளால் தனியார் பள்ளிகள் கலக்கத்தில் உள்ளன.

விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டால் பள்ளி வாகனங்களை இயக்குவது சிரமம் என்று புலம்புகிறார்கள். ஒரு இருக்கையில் ஒரு மாணவர் மட்டும்தான் இருக்க வேண்டும். அதற்கு மேல் அனுமதிக்கக்கூடாது என்ற விதி கொண்டு வரப்பட்டால் பள்ளி பஸ் - வேன்களை இயக்க முடியாத நிலை ஏற்படும் என்று கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பள்ளி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

மாணவர்களுக்கு கல்வியும், ஒழுக்கத்தையும் கற்று கொடுப்பதற்கே எங்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. இதில் பஸ், வேன் போக்குவரத்து எங்களுக்கு கூடுதல் வேலைப் பளுவாகும்.

வாகனங்களை பராமரிக்கவும், சம்பளம் கொடுக்கவும் வருடத்துக்கு ஒருமுறை எப்.சி. சென்று வரவும் அதிக செலவாகிறது. குழந்தைகளை நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக ஏற்றிச் சென்றால் தான் போக்குவரத்து கட்டணம் குறைவாக பெற்றோர்களிடம் வசூலிக்க முடியும்.

ஒரு இருக்கைக்கு ஒரு மாணவர் வீதம் அனுமதிக்கப்பட்டால் கட்டணம் பல மடங்கு அதிகமாக வசூலிக்க வேண்டும். இது பெற்றோர்களுக்கு கூடுதல் சுமையாகும். பள்ளி தொடங்கிய பிறகு திடீரென பஸ் கட்டணத்தை அதிகரிக்க முடியுமா? பெற்றோர் அதை பிரச்சினையாக்குவார்கள்.

அதனால் பெரும்பாலான தனியார் பள்ளிகள் வாகனங்களை விற்க முடிவு செய்துள்ளது. படிப்படியாக பள்ளி வாகனங்களை நிறுத்தி விட்டு பெற்றோர்களே, குழந்தைகளை நேரில் கொண்டு வந்துவிட அறிவுறுத்துகிறோம்.

கோர்ட்டு, அரசின் கெடுபிடிக்கு பயந்து தனியார் பள்ளிகள் இந்த முடிவை எடுக்கின்றன. வாகனங்களில் செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டு வருகிறோம். அடுத்த வருடம் முழுமையாக பஸ் - வேன்களை இயக்க மாட்டோம்.

பள்ளி வாகனங்கள் லாப நோக்கத்திற்காக இயக்கவில்லை. பெற்றோர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஓட்டுகிறோம். ஆனால் அதுவே பெரிய பிரச்சினையாகி விடுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாகவே இருந்து வருகிறது. தலைநகர் சென்னையில் பகலில் வெயில் சுட்டெரித்து ....»

MM-TRC-B.gif