கட்டிடம் இடிந்து தொழிலாளர்கள் பலி: ஐகோர்ட்டில் ஜேப்பியார் ஜாமீன் மனு || building collapsed workers dead high court jappiar bail petition
Logo
சென்னை 11-02-2016 (வியாழக்கிழமை)
கட்டிடம் இடிந்து தொழிலாளர்கள் பலி: ஐகோர்ட்டில் ஜேப்பியார் ஜாமீன் மனு
கட்டிடம் இடிந்து தொழிலாளர்கள் பலி: ஐகோர்ட்டில் ஜேப்பியார் ஜாமீன் மனு
சென்னை, ஆக. 14-

காஞ்சீபுரத்தில் தனியார் கல்லூரியில் உள்விளையாட்டரங்கு கட்டிடம் இடிந்து விழுந்ததில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் 10 பேர் பலியானார்கள்.

இவ்வழக்கில் அக்கல்லூரி அதிபர் ஜேப்பியார் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

இம்மனு நீதிபதி அக்பர் அலி முன்பு விசாரணைக்கு வந்தது. ஜேப்பியார் தரப்பில் மூத்த வக்கீல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி வாதிட்டார். போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் அய்யப்பராஜா, இந்த வழக்கில் பப்ளிக் பிராசிகியூட்டர் ஆஜராக இருப்பதால் வழக்கு விசாரணையை ஒத்தி வைக்கவேண்டும். இந்த மனு குறித்து பதில் அளிக்க காலஅவகாசம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து நீதிபதி அக்பர் அலி ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தார். இம்மனு குறித்து போலீஸ் தரப்பில் விளக்கம் கேட்டு கோர்ட்டில் தெரிவிக்கும்படி அரசு வக்கீலிடம் நீதிபதி அறிவுறுத்தினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தே.மு.தி.க. மாநாடு அமைய வேண்டும்: தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்

தே.மு.தி.க. நிறுவனத் தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த், கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif