முத்தூட் நிதி நிறுவனத்தில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளை முயற்சி: மானேஜர் வயிற்றில் குண்டு பாய்ந்தது || Bank manager shot at near Bangalore University attackers flee
Logo
சென்னை 04-03-2015 (புதன்கிழமை)
முத்தூட் நிதி நிறுவனத்தில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளை முயற்சி: மானேஜர் வயிற்றில் குண்டு பாய்ந்தது
முத்தூட் நிதி நிறுவனத்தில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளை முயற்சி: மானேஜர் வயிற்றில் குண்டு பாய்ந்தது
பெங்களூர், ஆக.15-
 
பெங்களூரில் மாரியப்பன பாளையம் என்ற இடத்தில் முத்தூட் நிதி நிறுவனம் செயல்படுகிறது. இங்கு மேலாளராக சுதாகர் (59) என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று காலை 11.15 மணிக்கு சுதாகரும், 2 ஊழியர்களும் இருந்தனர். அப்போது 3 வாலிபர்கள் ஹெல்மட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
 
ஒருவன் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து இருந்தான். மற்ற 2 பேர் நிதி நிறுவனத்துக்குள் புகுந்தனர். திடீரென்று மானேஜர் சுதாகரை துப்பாக்கியை காட்டி மிரட்டினான். மற்றொருவன் பெண் ஊழியர் தேஜஸ்வனியிடம் இருந்த நகையை பறிக்க முயன்றான்.
 
இந்த நேரத்தில் சுதாகர் சாமர்த்தியமாக செயல்பட்டு பட்டனை அழுத்தி அபாய மணியை ஒலிக்கச் செய்தார். மேலும் மர்ம மனிதன் கையில் இருந்த துப்பாக்கியை தட்டி விட்டார்.
 
இதனால் உஷாரான மற்றொரு கொள்ளையன் சுதாகரை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். இதில் அவர் வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. பின்னர் இருவரும் துப்பாக்கிகளை கீழே போட்டு விட்டு தப்பி ஓடினர். அங்கு தயாராக நின்றிருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி மறைந்து விட்டனர்.
 
தகவல் கிடைத்ததும் போலீஸ் சூப்பிரண்டு அனுபம் அகர்வால் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். காயம் அடைந்த சுதாகர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆபரேஷன் மூலம் குண்டுகள் அகற்றப்பட்டன. அவர் அபாய கட்டத்தை தாண்டி குணம் அடைந்து வருகிறார்.
தப்பி ஓடிய 3 கொள்ளையர்களும் 20 வயதுக்குட்பட்டவர்கள் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
 
நிதி நிறுவனத்தில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிரா செயல்படாததால் கொள்ளையர்களை அடையாளம் காண முடியவில்லை. நிதி நிறுவனத்தில் அவர்கள் விட்டுச் சென்றது நாட்டு துப்பாக்கிகள் என தெரிய வந்தது. அவற்றை போலீசார கைப்பற்றி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

ஊத்துக்கோட்டையில் இடியுடன் பலத்த மழை

ஊத்துக்கோட்டையில் நேற்று மதியம் வெயில் சுட்டெரித்தது. மாலை 5.30 மணியளவில் கருமேகங்கள் சூழ்ந்து வானம் இருண்டு காணப்பட்டது. ....»

amarprakash160600.gif
amarprakash160600.gif