இந்திய கம்யூனிஸ்டுகள் மீதும் கொலைப்பழி குற்றச்சாட்டு: மார்க்சிஸ்டு செயலாளர் பினராய் விஜயன் பரபரப்பு பேச்சு || murder complaint on indian communist pranai speech
Logo
சென்னை 26-05-2015 (செவ்வாய்க்கிழமை)
இந்திய கம்யூனிஸ்டுகள் மீதும் கொலைப்பழி குற்றச்சாட்டு: மார்க்சிஸ்டு செயலாளர் பினராய் விஜயன் பரபரப்பு பேச்சு
இந்திய கம்யூனிஸ்டுகள் மீதும் கொலைப்பழி குற்றச்சாட்டு: மார்க்சிஸ்டு செயலாளர் பினராய் விஜயன் பரபரப்பு பேச்சு
திருவனந்தபுரம், ஆக. 13-
 
கேரளாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கிய சந்திரசேகரன் கொலை செய்யப்பட்டார். கேரளா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து இடுக்கி மாவட்ட மார்க்சிஸ்டு செயலாளராக இருந்த மணி பேசியபோது, மார்க்சிஸ்டு கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் பட்டியலிட்டு கொல்லப்பட்டனர் என்றார்.
 
இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி மணி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதோடு கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. மணி இந்த வழக்கை சந்தித்து வரும் நிலையில் 2 நாட்களுக்கு முன்பு இன்னொரு பிரச்சினையில் காங்கிரஸ் தொண்டர் மார்க்சிஸ்டு கட்சியினரால் கொல்லப்பட்டதாக பேசி மீண்டும் பரபரப்பை கிளப்பினார்.
 
மணியின் இத்தகைய பேச்சுக்கு கேரளாவில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. அதன் மாநில செயலா ளரும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியை விமர்சித்து அறிக்கைகளும், பொதுக்கூட்டங்களில் கண்டனம் தெரிவித்தும் பேசினார்.
 
இதற்கு கேரள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் பினராய் விஜயன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆலப்புழையில் நேற்று நடந்த கூட்டத்தில் அவர் பேசும்போது, மார்க்சிஸ்டு கட்சியை விமர்சிக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் யோக்கியமானவர்கள் இல்லை. அவர்களை பற்றியும், அவர்களின் கட்சி பற்றியும் பல விவரங்கள் எனக்கு தெரியும், அவர் களும் கொலை குற்றச்சாட்டு களுக்கு ஆளானவர்கள்தான் என்று கூறினார்.
 
இது தொடர்பாக அவர், மேலும் கூறியதாவது:-
 
ஒன்றுபட்டு இருந்த கம்யூனிஸ்டுகள் இரண்டாக பிரிந்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுகள் என்றும் இந்திய கம்யூனிஸ்டுகள் என்றும் ஆனார்கள். இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து பிரிந்து மார்க்சிஸ்டு கட்சியில் சேர்ந்தவர்களை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் என்ன செய்தார்கள், எப்படி தாக்கினார்கள் என்பது எங்களுக்கு தெரியும்.
 
ஆலப்புழை பாலகிருஷ்ணன், சுசீந்திரன், திருச்சூர் சுப்பிரமணியன் ஆகியோர் கொல்லப்பட்டது எப்படி என்பதும் எங்களுக்கு தெரியும். எங்களை விமர்சிக்கும் தகுதி இந்திய கம்யூனிஸ்டுக்கு இல்லை.
 
இவ்வாறு அவர் பேசினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

ஐதராபாத் விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.2 கோடி தங்கம் பறிமுதல்

நகரி, மே. 26–ஐதராபாத் விமான நிலையத்தில் துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் வந்து இறங்கியது. அதில் ....»

MM-TRC-Set2-B.gif