சுதந்திர தினவிழாவை சீர்குலைக்க சதி: விமான கடத்தலை தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடு || independence day flight kidnapped protection
Logo
சென்னை 02-07-2015 (வியாழக்கிழமை)
  • வெள்ளை மாளிகையை புகைப்படம் எடுக்க விதிக்கப்பட்டிருந்த 40 ஆண்டுகால தடை நீக்கம்
  • திருவண்ணாமலை கொசமடத்தெருவில் உள்ள வீட்டில் 120 பவுன் நகை கொள்ளை
சுதந்திர தினவிழாவை சீர்குலைக்க சதி: விமான கடத்தலை தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
சுதந்திர தினவிழாவை சீர்குலைக்க சதி: விமான கடத்தலை தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
புதுடெல்லி, ஆக. 13-

இந்தியாவின் 65-வது சுதந்திர தினம் நாடெங்கும் நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. பிரதமர் மன்மோகன்சிங் டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவார். மாநிலங்களில் முதல்-மந்திரிகள் கொடியேற்றி வைப்பார்கள்.

இந்த கொண்டாட்டங்களில் ஊடுருவி தற்கொலை தாக்குதல்கள் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதை உளவுத்துறை கண்டறிந்து எச்சரித்துள்ளது.

வடகிழக்கு மாநிலம் ஒன்றிலிருந்து விமானத்தை கடத்தி, அதன்மூலம் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை மத்திய அரசை உஷார் படுத்தியுள்ளது. அதுபோல மேற்கு கடற்கரை பகுதி மாநிலம் ஒன்றுக்குள் 14 தீவிரவாதிகள் பயங்கர நாசவேலை திட்டத்துடன் ஊடுருவி இருப்பதாக, அந்த மாநில அரசுக்கு உளவுத்துறை தகவல் அனுப்பியுள்ளது.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து புறப்படும் விமானத்தை கடத்தி, அந்த மாநிலத்தில் உள்ள கட்டிடங்களில் மோத செய்ய தீவிரவாதிகள் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

கடந்த 2 நாட்களில் மட்டும் உளவுத்துறைக்கு நிறைய தகவல்கள் வந்துள்ளன. இத்தகவல்களில் பெரும் பாலானவை உறுதி செய்ய முடியாமல் உள்ளன. இதையடுத்து நாடெங்கும் உஷார் நிலையில் இருக்குமாறு உளவுத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

தீவிரவாதிகள் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளதால் டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக விமான நிலையங்களில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான கடத்தலை முறியடிப்பதற்காக விமான நிலைய ஊழியர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்திற்கு வரும் எல்லா பயணிகளையும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விமானத்துக்குள் அனுமதிக்கும் முன்பு பயணிகளிடம் தீவிர சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உச்சக்கட்ட பாதுகாப்பால் விமான நிலையங்களில் பயணிகள் உள்ளே செல்லவும், வெளியில் வரவும் அதிக நேரமானது.

முக்கிய நகரங்களில் போலீஸ் ரோந்து பணியை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னையில் சுதந்திர தின விழாவுக்கு 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெறும் இடங்கள், வழிபாட்டு தலங்கள், மார்க்கெட்டுகள், பஸ் நிலையங்கள், சந்தைகள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆயுதம் ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

வாட்ஸ் அப், வைபர் அழைப்புகளை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு முயற்சி

உள்நாட்டில் குரல் அழைப்பு சேவைகளை வழங்கிவரும் வாட்ஸ் அப், வைபர் போன்றவற்றை கண்காணிக்க தொலை தொடர்பு ....»