சவுதி அரேபியாவில் பெண்களுக்கு தனிநகரம் || saudi arabia ladies separate city
Logo
சென்னை 01-04-2015 (புதன்கிழமை)
  • ரெயில்வே நடைமேடை கட்டணம் ரூ.10 இன்று முதல் அமல்
  • ரெயில் டிக்கெட் 120 நாட்களுக்கு முன்பாக பதிவு செய்யும் முறை இன்று முதல் அமல்
சவுதி அரேபியாவில் பெண்களுக்கு தனிநகரம்
சவுதி அரேபியாவில் பெண்களுக்கு தனிநகரம்
ரியாத், ஆக.13-

முஸ்லிம் நாடான சவுதி அரேபியாவில் ஷரியத் சட்டம் அமலில் உள்ளது. அதன்படி பெண்களுக்கு என சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதன்படி அவர்கள் வேலைக்கு செல்லக்கூடாது. அதனால் அங்கு 15 சதவீதம் பெண்களே பணிக்கு செல்கின்றனர். மற்றவர்கள் வீட்டில் பொழுதை வீணாக கழிக்கின்றனர். இதனால் அவர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகிறது.

எனவே, பெண்களுக்காக தனியாக தொழில் நகரங்களை உருவாக்க சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது. அங்கு தொழிற்சாலைகள் அமைத்து அவற்றை பெண்களே பணிபுரிந்து நிர்வகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கான முதற்கட்ட பணிகள் சவுதி தொழிற் கட்டமைப்பு ஆணையம் (மாடன்) மூலம் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டில் பெண்களுக்கென்றே பிரத்யேகமான புதிய நகரம் உருவாகும் என மாடன் நிறுவனத்தின் துணை டைரக்டர் ஜெனரல் சலே அல்-ரஷீத் தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது,

பெண்கள் திறமையானவர்கள், அவர்களால் தொழிற்சாலைகளை சிறப்பாக நிர்வகித்து பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். அந்த திறன் அவர்களுக்கு இயற்கையிலேயே உள்ளது. சவுதி அரேபியாவில் இதுபோன்று பெண்களுக்கான தொழில் நகரங்கள் அதிக அளவில் உருவாக்கப்படும் என்றார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

ஏமனில் சிக்கித் தவித்த 350 இந்தியர்கள் மீட்பு

உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெறும் ஏமனில் சிக்கித் தவித்த 350 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அரேபிய நாடுகளில் ஒன்றான ....»