பெய்ஜிங், ஆக. 13-
சீனாவின் மேற்கு பகுதியில் ஷின்ஜியாங் மாகாணம் உள்ளது. அது திபெத்தின் எல்லையில் அமைந்துள்ளது. மலைகள் சூழ்ந்த இப்பகுதியில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் அங்குள்ள கெரியா என்ற இடத்தில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளில் ஓட்டம் பிடித்தனர்.
6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.
தகவலறிந்ததும் அங்கு மீட்பு குழுக்கள் அனுப்பப்பட்டன. இச்சம்பவத்தினால் உயிர் சேதமோ, காயமோ மற்றும் பொருட்சேதமோ ஏற்படவில்லை.
கோபன் நகரை மையமாக வைத்து பூமிக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மலைகள் சூழ்ந்த இந்த இடம் பூகம்ப ஆபத்து பகுதியில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் மாலை இதே மாகாணத்தில் உள்ள ஷாசீ நகர் பகுதியில் 5.3 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் பாதிப்பு எதுவும் இல்லை.