லண்டன் ஒலிம்பிக் கோலாகல நிறைவு விழா: அமெரிக்கா 46 தங்கம் குவித்து முதலிடம் || London Olympics end with a musical party
Logo
சென்னை 31-08-2015 (திங்கட்கிழமை)
லண்டன் ஒலிம்பிக் கோலாகல நிறைவு விழா: அமெரிக்கா 46 தங்கம் குவித்து முதலிடம்
லண்டன் ஒலிம்பிக் கோலாகல நிறைவு விழா: அமெரிக்கா 46 தங்கம் குவித்து முதலிடம்
லண்டன், ஆக. 13-

30-வது கோடைகால ஒலிம்பிக் போட்டி லண்டன் நகரில் கடந்த 27-ந்தேதி தொடங்கியது. இதில் 204 நாடுகளில் இருந்து 10,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இந்தப்போட்டியின் தொடக்கத்தில் இருந்தே சீனா பதக்க பட்டியலில் முன்னணியில் இருந்தது. ஆனால் அமெரிக்கா கடந்த சில தினங்களாக தங்க பதக்கங்களை குவித்தது. இதனால் பதக்கப்பட்டியலில் அந்த அணியே முதலிடம் பிடித்தது.

நேற்றைய கடைசி நாளில் 15 தங்கம் வழங்கப்பட்டது. இதில் சீனாவுக்கு ஒரு தங்கம்கூட கிடைக்கவில்லை. ரஷியா அதிகபட்சமாக 3 தங்கமும், அமெரிக்கா 2 தங்கமும் நேற்று பெற்றன. அமெரிக்கா 46 தங்கம், 29 வெள்ளி, 29 வெண்கலம் ஆக மொத்தம் 104 பதக்கம் பெற்று பதக்கப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.

கடந்த ஒலிம்பிக்கில் முதல் இடத்தை பிடித்த சீனா 38 தங்கம், 27 வெள்ளி, 22 வெண்கலம் ஆக மொத்தம் 87 பதக்கம் பெற்று 2-வது இடத்தை பிடித்தது. போட்டியை நடத்திய இங்கிலாந்து இந்த ஒலிம்பிக்கில் மிகவும் சிறப்பாக செயல்பட்டது. அந்த அணி 29 தங்கம், 17 வெள்ளி, 19 வெண்கலம் ஆக மொத்தம் 65 பதக்கம் பெற்று 3-வது இடத்தை பிடித்தது.

ரஷியா 24 தங்கம் உள்பட 82 பதக்கம் பெற்று 4-வது இடத்தையும், தென்கொரியா 13 தங்கம் உள்பட 28 பதக்கம் பெற்று 5-வது இடத்தை பிடித்தன. இந்திய அணி 2 வெள்ளி, 4 வெண்கலம் ஆக மொத்தம் 6 பதக்கம் பெற்று 55-வது இடத்தை பிடித்தது.

85 நாடுகளே பதக்கப்பட்டியலில் இடம் பெற்றன. 119 நாடுகள் எந்தவித பதக்கமும் பெறவில்லை. பதக்கப்பட்டியலில் 85 நாடுகள் இருந்தாலும் 54 அணிகளே தங்கப்பதக்கம் பெற்று இருந்தன.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் இழுத்தவர் உசேன் போல்ட். உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரரான அவர் பெய்ஜிங் ஒலிம்பிக்கை போலவே லண்டனிலும் சிறப்பாக செயல்பட்டார். 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்தில் உலகின் அசைக்க முடியாத வீரராக திகழ்கிறார்.

இதேபோல அமெரிக்க நீச்சல் வீரரான பெல்ப்ஸ் ஒலிம்பிக்கில் அதிக பதக்கம் வென்றவர் என்ற புதிய சாதனையை படைத்தார். லண்டன் ஒலிம்பிக் போட்டி கோலாகலத்துடன் நேற்று நிறைவு பெற்றது.

இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணி முதல் அதிகாலை 4.30 மணி வரை 3 மணி நேரம் நிறைவு விழா நடந்தது. நிறைவு விழாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. லண்டன் ஐபிக்பென் மற்றும் லண்டன் பாலம் ஆகியவற்றின் மாதிரிகள் காண்பிக்கப்பட்டன.

வின்ஸ்டன் சர்ச்சில்போல் வேடமனிந்த ஒருவர் கலை நிகழ்ச்சிகளை நடத்தியது பார்வையாளர்களை கவர்ந்தது. பாடகர்கள் ரேடேவிஸ், எமிலி ஆகியோர் பாடல்களை பாடி மகிழ்வித்தனர்.

நிறைவு விழாவின் போது ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகளும் கொடியை ஏந்தி சென்றனர். வெண்கல பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் இந்திய கொடியை ஏந்தி சென்றார். ஒலிம்பிக் மைதானத்தில் நிகழ்த்தப்பட்ட வான வேடிக்கை நிகழ்ச்சிகள் மிகவும் பிரமிப்பை ஏற்படுத்தியது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

உலக தடகள போட்டியின் கடைசி நாளில் ஜெர்மனி, எத்தியோப்பியா வீராங்கனைகளுக்கு தங்கம்

உலக தடகள போட்டியின் கடைசி நாளில் ஜெர்மனி, எத்தியோப்பியா  வீராங்கனைகள் தங்கம் வென்று முத்திரை பதித்தனர். ....»

amarprash.gif