ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்: 66 கிலோ மல்யுத்த போட்டியில் சுஷில்குமார் இறுதிப் போட்டிக்கு தகுதி || London olympic wrestling sushilkumar final
Logo
சென்னை 29-11-2014 (சனிக்கிழமை)
ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்: 66 கிலோ மல்யுத்த போட்டியில் சுஷில்குமார் இறுதிப் போட்டிக்கு தகுதி
ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்: 66 கிலோ மல்யுத்த போட்டியில் சுஷில்குமார் இறுதிப் போட்டிக்கு தகுதி
லண்டன், ஆக.12

ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான மல்யுத்த போட்டியில் 66 கிலோ, மற்றும் 96 கிலோ பிரிவு போட்டிகள் இன்று லண்டனில் நடைபெறுகின்றன. இதில் 66 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சுஷில்குமாரும், உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டின் இக்தியோர் நவ்ருஷோவ்-ம் மோதினர்.

இதில், இந்தியாவின் சுஷில்குமார் 3-1 என்ற புள்ளி கணக்கில்முன்னிலை பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அரை இறுதிப் போட்டியில் கசகஸ்தான் நாட்டு வீரரை எதிர்கொண்ட சுஷில்குமார் 3-1 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

இதனால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்க வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இறுதிப் போட்டியில் சுஷில்குமார் வெற்றி பெறும் பட்சத்தில் தங்கப் பதக்கமும், தோல்வியடைந்தால் வெள்ளிப் பதக்கமும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

தர்மபுரி அருகே பிறந்த குழந்தைக்கு சூடு

தர்மபுரி, நவ. 29–தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள போடூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது ....»