புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க முதல் அமைச்சர் தனிப்பிரிவில் புதிய வலைதளம்: ஜெயலலிதா தொடங்கி வைத்தார் || action on public people compalint new internet option cmcell
Logo
சென்னை 23-10-2014 (வியாழக்கிழமை)
  • தொடர் கனமழை: காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • பிரதமர் நரேந்திர மோடி இன்று ஸ்ரீநகர் பயணம்
  • கனடா பாராளுமன்றத்தில் தாக்குதல்: ஒபாமா கண்டனம்
  • தென் மாவட்டங்களில் மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்
  • மேற்கு வங்கத்தில் உள்ள மால்டாவில் 48 மணி நேரத்தில் 8 பச்சிளம் குழந்தைகள் பலி
புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க முதல்- அமைச்சர் தனிப்பிரிவில் புதிய வலைதளம்: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க முதல்- அமைச்சர் தனிப்பிரிவில் புதிய வலைதளம்: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
சென்னை, ஆக. 12-
 
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
 
ஏழை- எளிய மக்களும், சாமானியர்களும் தங்கள் அடிப்படைத் தேவைகளையும் அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் உரிய முறையில் அவர்களை சென்றடையும் வகையிலும், தங்கள் குறைகளை தெரிவித்து உரிய நிவாரணம் பெறும் நோக்கத்துடனும், முதல் - அமைச்சரின் தனிப்பிரிவு இயங்கி வருகிறது.
 
தற்போது முதல்- அமைச்சரின் தனிப் பிரிவில் நாள்தோறும் பொதுமக்களிடமிருந்து நேரடியாகவும், அஞ்சல் வழி, மின்னஞ்சல் மற்றும் இதர ஊடகங்கள் வாயிலாகவும் நாளொன்றுக்கு சுமார் 3000 முதல் 3,500 வரை மனுக்கள் பெறப்படுகின்றன. இம்மனுக்கள் தனிக்குறியீடுகள் மூலம் வகைப்படுத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 
இப்பிரிவில் பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து எடுக்கப்படும் நடவடிக்கைகளினால் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.
முதல்- அமைச்சரின் தனிப்பிரிவின் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கும் நோக்கில் முதல் - அமைச்சரின் தனிப் பிரிவிற்கு (http://cmcell.tn.gov.in) என்ற புதிய வலைதளத்தினை முதல் - அமைச்சர் ஜெயலலிதா துவங்கி வைத்தார்.
 
இவ்வலைதளத்தின் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீதான ஒப்புகைச்சீட்டு உடனுக்குடன் மனுதாரர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு பதிவு எண்ணுடன் அனுப்பி வைக்கப்படும்.
 
புதிய வலைத்தளம் மூலம் பெறப்படும் மனுக்கள், அம்மனு தொடர்புடைய அலுவலகத்திற்கு கணினி மூலம் மாற்றப்பட்டு, அதன் விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படும். சம்பந்தப்பட்ட அலுவலகத்திலுள்ள முதல் - அமைச்சர் தனிப்பிரிவின் ஒருங்கிணைப்பு அலுவலரின் பெயர் இந்த வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால் மனுதாரர் அந்த அலுவலரை நேரடியாக தொடர்பு கொள்ள முடியும்.
 
தற்போது அனைவரிடமும் செல்போன் பயன்பாடு அதிகமாக இருப்பதால் முதல் -அமைச்சரின் தனிப்பிரிவில் பெறப்படும் மனுக்களுக்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலம் மனுதாரர்களுக்கு ஒப்புகை செய்தி அனுப்பும் முறையினை முதல் -அமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
 
அஞ்சல் வழியாக அனுப்பப்படும் மனுக்களில் மனுதாரர் தங்களது செல்போன் எண்ணை குறிப்பிட்டிருந்தால் முதல்- அமைச்சரின் தனிப்பிரிவினால் வழங்கப்படும் பதிவு எண், தொடர்புடைய அலுவலகம் மற்றும் அலு வலர் ஆகிய விவரங்கள் முதல் - அமைச்சர் தனிப்பிரிவிலிருந்து குறுந்தகவல் மூலம் மனுதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
 
முதல்- அமைச்சர் ஜெயலலிதா, மருத்துவப் பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு பயிலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய 113 ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கல்வி உதவித் தொகையாக தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

கனடா: லாக்கரில் இருந்த 4 குழந்தைகள் பிணம்

ஒட்டாவா, அக்.23–கனடா நாட்டில் உள்ள ஒட்டாவா பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று பொதுமக்களுக்கு லாக்கர் வசதிகளை ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif