கூடங்குளத்தில் யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணி 10 நாட்களில் தொடங்கும்: வளாக இயக்குனர் தகவல் || kudankulam uraniyam fuel filling work with in 10 days start
Logo
சென்னை 02-04-2015 (வியாழக்கிழமை)
கூடங்குளத்தில் யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணி 10 நாட்களில் தொடங்கும்: வளாக இயக்குனர் தகவல்
கூடங்குளத்தில் யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணி 10 நாட்களில் தொடங்கும்: வளாக இயக்குனர் தகவல்
நெல்லை, ஆக. 12-
 
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 1-வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்க ஏதுவாக, அதில் எரிபொருள் நிரப்பும் பணிக்கு முந்தைய முறைப்படியான ஆய்வுகள் கடந்த ஜூன் 30-ந்தேதி தொடங்கப்பட்டன.
 
இந்த ஆய்வு பணிகள் 2 வாரத்திற்கு மேற்கொள்ளப்பட்டு இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து 1-வது அணு உலையில் யுரோனியம் எரிபொருள் நிரப்ப அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையம் நேற்று முன்தினம் (10-ந்தேதி) அனுமதி அளித்தது.
 
இதனைத்தொடர்ந்து அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணியை விரைவில் தொடங்க அதிகாரிகள் குழு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
 
இதுகுறித்து கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் கூறியதாவது:-
 
1-வது அணு உலையில் எரிபொருள் நிரப்ப இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதிக்காக காத்திருந்தோம். தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்புவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்.
 
இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையம் சில நிபந்தனைகளை செயல் படுத்துமாறு கூறியுள்ளது. அதன்படி சில பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் முடிவடைந்ததும் இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்திற்கு அறிக்கை அளிக்கப்படும். அதனடிப்படையில் அவர்கள் ஆய்வை மேற்கொள்வார்கள். அதன் பிறகே யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கும். 10 நாட்களுக்குள் யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கப்படும்.
 
இந்த பணி 10 முதல் 15 நாட்களுக்குள் முடிவடையும். பின்பு மின் உற்பத்திக்கான நிலைப்படுத்தப்பட்ட தொடர் வினை பணிகள் 5 கட்டங்களாக நடக்கும். இதன் ஒவ்வொரு கட்டத்திலும் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வார்கள். முதல் அணு உலையில் செப்டம்பர் மாதம் முதல் மின் உற்பத்தி தொடங்கப்படும்.
 
இவ்வாறு வளாக இயக்குனர் சுந்தர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

நேர்மைக்கு கிடைத்த பரிசு: 23 வருட பணியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி கெம்காவை 45 முறை இடமாற்றம் செய்த அரசாங்கம்

சோனியாவின் மருமகன் நில மோசடி செய்ததாக ஆவணங்கள் மூலம் பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறிய மூத்த ஐ.ஏ.எஸ். ....»