இன்று குரூப் 2 தேர்வு: 3 ஆயிரத்து 600 இடங்களுக்கு 6 1/2 லட்சம் பேர் எழுதினர் || today group 2 exam 6.5 lakhs person written
Logo
சென்னை 25-11-2015 (புதன்கிழமை)
இன்று குரூப்-2 தேர்வு: 3 ஆயிரத்து 600 இடங்களுக்கு 6 1/2 லட்சம் பேர் எழுதினர்
இன்று குரூப்-2 தேர்வு: 3 ஆயிரத்து 600 இடங்களுக்கு 6 1/2 லட்சம் பேர் எழுதினர்
சென்னை, ஆக 12-
 
தமிழ்நாட்டில் காலியாக உள்ள நகராட்சி கமிஷனர் பதவி, பத்திர பதிவாளர், வேலை வாய்ப்பு அதிகாரி பதவி, வருவாய்துறை உதவியாளர், கூட்டுறவு தணிக்கையாளர், தலைமை செயலக உதவி பிரிவு அதிகாரி பதவி ஆகியவற்றை நிரப்ப தமிழ்நாடு தேர்வாணையம் இன்று எழுத்து தேர்வு நடத்தியது.
 
இதற்கு மொத்தம் உள்ள 3631 காலியிடங்களுக்கு 6 லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் ஹால் டிக்கெட் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது. இதற்கான தேர்வு இன்று நடந்தது. முன்கூட்டியே தேர்வு மையங்களுக்கு வந்து காத்திருந்தனர். காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை தேர்வு நடந்தது. இந்த தேர்வை 6 லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதினர்.
 
சென்னையில் எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குயின் மேரீஸ் கல்லூரி, ராயப்பேட்டை புதுக்கல்லூரி, காயிதே மில்லத் அரசினர் மகளிர் கல்லூரி, சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் 70 ஆயிரம் பேர் எழுதினர்.
 
தேர்வு அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப் பட்டு ஆன்லைன் மூலம் கணகாணிக்கப்பட்டது. தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க மாநிலம் முழுவதும் 400 பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

96 வினாடிகளில் புதிய டொயோட்டா இன்னோவா தயாரிப்பு

இந்தோனேஷியாவில் சமீபத்தில் புதிய டொயோட்டா இன்னோவா அறிமுகம் செய்யப்பட்டது. இதன் ஆரம்பவிலை ரூ. 13.64 லட்சமாக ....»