மும்பை கலவரத்தில் 2 பேர் பலி: வழிபாட்டு தலங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு || Two dead in Mumbai as anti Assam riot protest turns violent
Logo
சென்னை 28-02-2015 (சனிக்கிழமை)
மும்பை கலவரத்தில் 2 பேர் பலி: வழிபாட்டு தலங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
மும்பை கலவரத்தில் 2 பேர் பலி: வழிபாட்டு தலங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
மும்பை,ஆக.11-
 
அசாம் வன்முறை மற்றும் மியான்மரில் சிறுபான்மை முஸ்லிம் மக்கள் மீதான தாக்குலைக் கண்டித்து மும்பையில் இன்று ரசா அகாடமி தலைமையில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தின.
 
ஆசாத் மைதானத்தில் நடந்த இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். இதையடுத்து போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரித்தனர். அப்போதும் அவர்கள் கலைந்து செல்லாததால் போலீசார் தடியடி நடத்தினர்.
 
இதனால் அந்த இடம் போர்க்களமாக காட்சியளித்தது. இந்த தடியடி மற்றும் வன்முறையில் 12 பேர் காயமடைந்தனர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் இறந்தனர்.
 
இதனால் மும்பையின் மற்ற பகுதிகளிலும் கலவரம் பரவும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். மும்பை முழுவதும் உள்ள மதவழிபாட்டு தலங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.மேலும் கலவரத்துக்கு காரணமானவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 
தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இந்த வன்முறைக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ரசா அகாடமியின் பொதுச்செயலாளர் முகமது சயீத் தெரிவித்தார்.
 
போராட்டம் நடைபெற்றபோது யாரோ சிலர் திடீரென உள்ளே புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். நாங்கள் ஒருபோதும் வன்முறையை ஆதரிப்பதில்லை. இது கடும் கண்டனத்துக்குரியது என்றும் முகமது சயீத் தெரிவித்தார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

பீகாருக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு: மத்திய அரசுக்கு நிதிஷ் குமார் நன்றி

மத்திய அரசின் பொது பட்ஜெட்டில் பீகார் மாநிலத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்த மத்திய அரசுக்கு ....»

amarprakash160600.gif
amarprakash160600.gif