அசாம் கலவரத்தை வைத்து அரசியல் நடத்துகிறார்கள்: பா.ஜ.க. அசாம் கணபரிசத் மீது தருண் கோகாய் கடும் தாக்கு || BJP AGP playing politics over Assam violence Tarun Gogoi
Logo
சென்னை 31-05-2015 (ஞாயிற்றுக்கிழமை)
அசாம் கலவரத்தை வைத்து அரசியல் நடத்துகிறார்கள்: பா.ஜ.க.-அசாம் கணபரிசத் மீது தருண் கோகாய் கடும் தாக்கு
அசாம் கலவரத்தை வைத்து அரசியல் நடத்துகிறார்கள்: பா.ஜ.க.-அசாம் கணபரிசத் மீது தருண் கோகாய் கடும் தாக்கு
கவுகாத்தி,ஆக.11-
 
அசாமில் நடைபெற்ற கலவரத்தை வைத்து பா.ஜனதாவும், அசாம் கணபரிசத்தும் அரசியல் நடத்துவதாக முதல்வர் தருண் கோகாய் குற்றம்சாட்டினார்.
 
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:-
 
பாரதீய ஜனதாவும், அசாம் கண பரிசத்தும் அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே கருத்து கூறி வருகின்றன. வெளிநாட்டவர்கள் ஊடுருவல் இவர்களின் பிரச்சினை இல்லை. அப்படியென்றால் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது ஊடுருவலை தடுக்க என்ன செய்தார்கள்? கணபரிசத் தலைவர் மகந்தா இரண்டுமுறை முதல்வராக இருந்தார். அவர் என்ன செய்தார்?இப்போது வெளிநாட்டவர்கள் இங்கு ஊடுருவியிருந்தால், அதை அவர்கள் நிரூபிக்கட்டும்.
 
எந்த அரசும் இதுவரை செய்யாத அளவுக்கு இந்திய-வங்கதேச எல்லையில் காங்கிரஸ் அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. அத்துடன் ஊடுருவலையும் தடுத்து நிறுத்தியுள்ளது.
 
இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

மேகி நூடுல்ஸ் விவகாரம்: நெஸ்ட்லே இந்தியா, அமிதாப் பச்சன், ப்ரீத்தி ஜிந்தா உட்பட 8 பேர் மீது வழக்கு

கடந்த சில தினங்களாக நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, மேகி நூடுல்ஸ் விவகாரத்தில் ....»

MM-TRC-Set2-B.gif