எரிபொருள் நிரப்ப அனுமதி எதிரொலி: கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீண்டும் போராட்டம் || kudankulam protester against demonstration
Logo
சென்னை 24-11-2014 (திங்கட்கிழமை)
எரிபொருள் நிரப்ப அனுமதி எதிரொலி: கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீண்டும் போராட்டம்
எரிபொருள் நிரப்ப அனுமதி எதிரொலி: கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீண்டும் போராட்டம்
சென்னை,ஆக.11-
 
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருளை நிரப்ப அணுசக்தி ஆணையம் அனுமதி அளித்துள்ளது.எனவே இன்னும் 10 நாட்களில் யுரேனியம் எரிபொருளை நிரப்பி மின் உற்பத்தியை தொடங்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
 
இதனால் அதிர்ச்சியடைந்த அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீண்டும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.இதுதொடர்பாக இடிந்தகரையில் இன்று உதயகுமார் தலைமையில் போராட்டக் குழுவினர் கூடி ஆலோசனை நடத்தினர்.
 
அப்போது ஞாயிற்றுக்கிழமை முதல் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தம் செய்வது என்றும், மின் உற்பத்தியை நிறுத்தும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
அணு உலை எதிர்ப்பாளர்களின் அடுத்த கட்ட போராட்டம் ஆரம்பிக்க உள்ளதால் கூடங்குளம் பகுதியில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிப்பு

மதுரை, நவ. 24–மதுரை வண்டியூர் அப்துல் கலாம் தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம் இவரது மனைவி பாண்டியம்மாள்தேவி ....»