அரச்சலூர் அருகே தாறுமாறாக ஓடிய லாரி வீட்டின் மீது மோதி கவிழ்ந்தது || arachalur near haywire lorry house clash mishaps
Logo
சென்னை 12-02-2016 (வெள்ளிக்கிழமை)
அரச்சலூர் அருகே தாறுமாறாக ஓடிய லாரி வீட்டின் மீது மோதி கவிழ்ந்தது
அரச்சலூர் அருகே தாறுமாறாக ஓடிய லாரி வீட்டின் மீது மோதி கவிழ்ந்தது
மொடக்குறிச்சி, ஆக. 11-
 
உடுமலையில் இருந்து சதிஷ்கர் மாநிலத்துக்கு தக்காளி ஏற்றி கொண்டு ஒரு லாரி சென்றது. இந்த லாரி இன்று அதிகாலை 3 மணி அளவில் அரச்சலூர் அருகே உள்ள வெள்ளகவுண்டன்வலசு என்ற இடத்தில் வேகமாக வந்து கொண்டு இருந்தது.
 
அங்குள்ள ஒரு திருப்பத்தில் லாரி திரும்பும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இந்த லாரி ரோட்டு ஒரத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது மோதி சமையல் அறை சுவரை இடித்துவிட்டு கவிழ்ந்தது.  
 
இந்த நேரத்தில் அந்த வீட்டின் சமையல் அறையை ஒட்டி உள்ள இன்னொரு அறையில் சாமிநாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேர் தூங்கி கொண்டு இருந்தனர். அவர்கள் சுவர் இடிந்த சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் காயம் ஏதும் இல்லாமல் உயிர் தப்பினர்.
 
இந்த விபத்தில் லாரி டிரைவர் மற்றும் கிளீனர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாதணை நடத்தி வருகிறார்கள்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif