இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் சுப்பிரமணியசாமி சந்திப்பு: தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வலியுறுத்தல் || subramanian swamy meet rajapaksa sri lanka president
Logo
சென்னை 07-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் சுப்பிரமணியசாமி சந்திப்பு: தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வலியுறுத்தல்
இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன்
 சுப்பிரமணியசாமி சந்திப்பு: தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வலியுறுத்தல்
கொழும்பு, ஆக 11-

ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி இலங்கை சென்றுள்ளார். அங்கு தலைநகர் கொழும்புவில் நடந்த ராணுவம் தொடர்பான சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார். பின்னர் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்து பேசினார். அப்போது இலங்கை இனப் பிரச்சினை குறித்தும், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்குவது குறித்தும் பேசியதாக தெரிகிறது. இதை தொடர்ந்து சுப்பிரமணியசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கையில் போலீஸ் துறையை நிர்வகிக்கும் அதிகாரத்தை தமிழர்களுக்கு வழங்க அரசு அச்சப்படுகிறது. இது போன்று அதிகாரத்தை பரவலாக்கினாலும் தவறாக பயன்படுத்தும் பட்சத்தில் அதை தடுக்க உரிய கண்காணிப்பு அமைப்புகளை அரசு அமைக்கலாம். இந்தியாவில், சட்டத்துக்கு எதிரான சூழ்நிலை நிலவும் மாநிலங்கள் மீது அரசியலமைப்பு சட்டம் 356-ன் படி மத்திய அரசு நடவடிக்கை எடுக்கலாம். அதன்படி, இலங்கையிலும் அது போன்று நடவடிக்கை எடுக்கலாம் என்பதை ராஜபக்சேவின் கவனத்துக்கு கொண்டு வந்தேன்.

இலங்கை அரசு அமைத்துள்ள நாடாளுமன்ற தேர்வு மூலம் தமிழர்கள் பகுதிகளில் நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள ராஜபக்சே விரும்புகிறார். இது தொடர்பாக தமிழ், தேசிய கூட்டணியில் இல்லாத கட்சிகளை ஒருங்கிணைக்கும் அவசியம் குறித்து அவரிடம் எடுத்துரைத்தேன். தற்போது நேர்மறையான நடவடிக்கைகளின் மூலம் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது இலங்கை அரசின் கடமையாகும் என்றும் அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

சீன மந்திரி கொழும்புக்கு திடீர் வருகை: விமான நிலையத்துக்கு இலங்கை மந்திரியை வரவழைத்து பேச்சு

மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் இலங்கையில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் அந்த ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif